ஒரே பேட்டி கலர் மாறியது; இஸ்லாமிய தலைவர்களுடன் பேசிய ரஜினி
டெல்லி வன்முறை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய தலைவர்கள் விடுத்த அறிக்கைகள், மற்றும் வேண்டுகொள்களால் ஈர்க்கப்பட்ட ரஜினி, அவர்களை போனில் அழைத்துப் பேசியதாகவும், விரைவில் அவர்களை நேரில் அழைக்கிறேன் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய தலைவர்கள் விடுத்த அறிக்கைகள், மற்றும் வேண்டுகொள்களால் ஈர்க்கப்பட்ட ரஜினி, அவர்களை போனில் அழைத்துப் பேசியதாகவும், விரைவில் அவர்களை நேரில் அழைக்கிறேன் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாக ரஜினி பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய தலைவர்கள் விடுத்த அறிக்கைகள், மற்றும் வேண்டுகொள்களால் ஈர்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், அவர்களை போனில் அழைத்துப் பேசியதாகவும், விரைவில் அவர்களை நேரில் அழைக்கிறேன் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
தமிழ் சினிமா உலகில் நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். இவர் அரசியலுக்கு வருவேன் என்று தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். ரஜினி தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று அறிவித்ததிலிருந்து, அவருடைய அரசியல் கருத்துகளை வைத்தும் அவர் பாஜக ஆதரவாளர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.
நடிகர் ரஜினியும் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் மகாபாரதக் கிருஷ்ணர், அர்ஜுனன் என்று புகழ்ந்தார். ரஜினியுடன் இந்து அமைப்பு தலைவர்களுடன் சந்திப்புகள் நடந்தன. பாஜக தலைவர்களும் ஊடகங்களில் ரஜினியின் கருத்துகளை ஆதரிப்பவர்களாக இருந்தனர்.
Advertisment
Advertisements
கடந்த ஆண்டு மத்திய அரசால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் சர்ச்சைக்குள்ளானது. நாடு முழுவதும் சிஏஏவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேசியதோடு, சிஏஏ சட்டத்தால் ஒரே ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முதல் ஆளாகப் போராடுவேன் என்று கூறினார்.
இந்த நிலையில், டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் இடையே நடைபெற்ற வன்முறையில் 42 பலியானார்கள். டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, “டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி, மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வன்முறையை அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்” என்று மத்திய அரசை முதன்முறையாக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்த ரஜினியின் கருத்தையும் மக்கள் போராட்டத்தைப் பற்றிய அவருடைய எண்ணத்தை மாற்றவும் ரஜினிக்கு தமிழ்நாடு ஜமாத்துல் அல் உலமா சபை என்ற அமைப்பு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தது. மேலும், அந்த அறிக்கையில், நடிகர் ரஜினி போராட்டக்காரர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். ஜனநாயக ரீதியாகப் போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்ற பழியில் இருந்து அவர் விடுபட வேண்டும். ரஜினியைச் சந்தித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திட்டமிட்டுள்ளது. எனினும் ‘அல்லாஹ் அவன் விரும்புகிறவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்’ (அல்குர்ஹான்)” என்று கூறியிருந்தனர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் அறிக்கை ரஜினியின் பார்வைக்குச் சென்றதையடுத்து, அதன் நிர்வாகி அன்வர் பாஷா உலவியை போனில் தொடர்புகொண்ட, ரஜினிகாந்த், “உங்கள் கண்ணியமிக்க அறிக்கை என்னைக் கவர்ந்தது. உங்கள் ஆட்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.விரைவில் நேரம் ஒதுக்கி அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், ரஜினிகாந்த், மேலும், சில இஸ்லாமிய அமைப்பு பொறுப்பாளர்களையும் ஒன்றாக அழைத்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"