New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Rajinikanth-10.jpg)
Rajinikanth thanked journalists, fans, RMM members
ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் மக்களுக்கு தேவை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்... புரட்சி வெடிக்கட்டும். - ரஜினி பேச்சு.
Rajinikanth thanked journalists, fans, RMM members
Rajinikanth thanks journalists : இரண்டு நாட்களுக்கு முன்பு (12/03/2020) சென்னை லீலா பேலஸில் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் தன்னுடைய அரசியல் வருகை குறித்தும், அதற்காக அவர் கொண்டுள்ள கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.
”ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் மக்களுக்கு தேவை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்... புரட்சி வெடிக்கட்டும். அப்போது நான் வருகின்றேன்” என்று அவர் அன்றைய தினம் கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் கருத்துகளை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகவியலாளர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ????????
— Rajinikanth (@rajinikanth) March 14, 2020
அந்த ட்விட்டரில் அவர் ”அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : ‘ஆங்ரி ஓல்ட் மேன்’ – ரஜினிகாந்த் முதல் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.