முதல்வன் திரைப்படமும்... ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணமும்!!!

நீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்பாற்ற வேண்டும்

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை இன்று நேரில் சென்று சந்தித்தார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி நடைப்பெற்று வந்த போராட்டத்தின் 100 ஆவது நாள் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

அப்படியும் கலவரம் கட்டுக்குள் அடங்காததால், போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதே எதிர்கட்சிகளை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனால் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விரைந்து, போராட்டத்தினால் காயம் அடைந்த பொதுமக்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருகின்ற செய்தி வெளியானதுமே அந்த பகுதி முழுவதும் மக்களிடன் கூட்டம் அலை மோத தொடங்கியது. செல்லுகின்ற வழி முழுவதும் அவருக்கு அமோகமான வரவேற்புகள் அளிக்கப்பட்டன. அதன் பின்பு மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்திடம் அங்கிருந்த பொதுமக்கள் ”தமிழகமே வஞ்சிக்கப்பட்டு விட்டது, நீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்பாற்ற வேண்டும். அடுத்த முதல்வர் நீங்கள் தான், தமிழகத்தின் தலையெழுத்தை நீங்கள் தான் மாற்ற வேண்டும்” என்றெல்லாம் அங்கிருந்த மக்கள் ரஜினிகாந்திடம் தெரிவித்தனர்.

இப்போது இந்த வீடியோவுக்கும் முதல்வன் திரைப்படத்திற்கு என்ன சம்மந்தம் என்று கேட்பவர்களுக்கு பதில் இதோ..இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்திருந்த திரைப்படம் தான் முதல்வன்.அரசியல் தலைவர்களின் சூழ்ச்சியால் அவதிப்படும் பொதுமக்கள் ஒருநாள் முதல்வராகி பல மாற்றங்களை செய்துக் காட்டிய அர்ஜூனிடம் வந்து நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என்று கேட்பார்கள்.இந்த திரைப்படத்தில் வரும் காட்சி போல தான் தூத்துக்குடி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதில் சின்ன மாற்றம் என்வென்றால் படத்தில் அர்ஜூன் ஏற்கனவே ஒருநாள் முதல்வர் ஆகி சாதித்து காட்டி இருப்பவர். நிஜத்தில் ரஜினி ஒரு நாள் முதல்வர் ஆகி கண்டிப்பாக சாதித்து காட்டுவேன் என்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close