/tamil-ie/media/media_files/uploads/2020/12/rajini-123.jpg)
rajinikanth twitter rajini tweet rajini fans
rrajinikanth twitter rajini tweet rajini fans சென்னை: அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்துவிட்டாலும் அவர் நிச்சயம் வருவார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். ஆனால் ரஜினியை தவிர தமிழகத்தில் வேறு யாரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரின் ரசிகர்கள் சிலர் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், என்னை அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று கூறி உருக்கமான அறிக்கை ஒன்றை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார்.
அதில், நான் ஏன் அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கிவிட்டேன். என் முடிவை நான் கூறிவிட்டேன். தயவுசெய்து இதன்பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை வேதனைப்படுத்த வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளர்.
— Rajinikanth (@rajinikanth) January 11, 2021
நான் என் முடிவை கூறிவிட்டேன்.தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொகிறேன்.கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடதியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிக்கை அவரின், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.