சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகள் செளந்தர்யா அவரது கணவர், மகன் வித்கிருஷ்ணா உதவியாளர் ஆகியோருடன் கன்னியாகுமரி வந்தார்.
பின்னர் இவர்கள் பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது, கோவில் மேலாளர் ஏற்பாட்டில் கோயில் பணியாளர்கள் உடன் சென்றனர்.

பகவதி அம்மனை தரிசித்த பின் கோவில் கொடிமரம் பகுதி மற்றும் சுற்று பிரகார பகுதியில் வலம் வந்தனர்.
இதையடுத்து செளந்தர்யா அவரது கணவர், மகன் ஆகியோர் வேகமாக வெளியே வந்து காரில் ஏறினர்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களிடம் பேச முயற்சித்தனர். ஆனால் சௌந்தர்யா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/