ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை காலமானார்
Rajaiv gandhi assassination convict Murugan : முருகன் அவரது தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் காண்பதற்காவது தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகனின் தந்தை இலங்கையில், திங்கள்கிழமை காலமானார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
முருகனின் தந்தை வெற்றிவேல் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். முன்னதாக, அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்த தகவல், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமது தந்தையுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாட, மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு முருகன் அவசர மனு அனுப்பியிருந்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், முருகன் அவரது தந்தையை கடைசியாக பார்க்காத இயலாமல் போனது. இந்த நிலையில், வெற்றிவேல் , இலங்கையின் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி காலமானார்.
இதையடுத்து, குறைந்தபட்சம் முருகன் அவரது தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் காண்பதற்காவது தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil