Advertisment

நளினிக்கு ஒருமாத காலம் பரோல் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பரோல் காலத்தில் விதிகளின்படி மனுதரார் செயல்பட வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது அல்லது அவர்களை சந்திப்பது, அல்லது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கூடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court, Nalini, Rajiv Gandhi, nalini sriharan, nalini rajiv gandhi, assassination of rajiv gandhi, nalini daughter, nalini murugan, perarivalan, nalini sriharan wiki, rajiv gandhi nalini, nalini daughter rajiv gandhi, nalini rajiv killer, நளினி, ராஜிவ் காந்தி

Madras High Court, Nalini, Rajiv Gandhi, nalini sriharan, nalini rajiv gandhi, assassination of rajiv gandhi, nalini daughter, nalini murugan, perarivalan, nalini sriharan wiki, rajiv gandhi nalini, nalini daughter rajiv gandhi, nalini rajiv killer, நளினி, ராஜிவ் காந்தி

மகளின் திருமண ஏற்படுகளை கவனிக்க ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினிக்கு 30 நாள் பரோல் (சிறைவிடுப்பு) அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த 28 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட தனக்கு வழங்கப்பட வில்லை எனவும், தன்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டி காட்டியுள்ளார். 20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி தன்னை முன்விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தன் தாத்தா, பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ரா வின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டுமென வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் தான் அளித்த மனு நிலுவையில் உள்ளதாகவும், அதேபோல தன் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றம் இதில் தலையிட்டு தனக்கு ஆறுமாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட விரும்புவதால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிடுமாறும் அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் நிலுவையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கு விசாரணைக்கு மனுதரார் நளினியை ஜூலை 5 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும், அவரை ஆஜர்படுத்த அழைத்து வரும் போது அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், காவல்துறை செய்து தரவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வேலூர் பெண்கள் தனிச்சிறை இருந்த நளினியை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தன்னுடைய வாதத்தை தமிழில் தொடங்கினர். தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய இந்த நீதிமன்றத்திற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் குற்றவாளி ஆக்கப்பட்டவர்களின் நான் நிரபராதி என கூறி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த அந்த குறிப்பை கொண்டு படிக்க தொடங்கினார். தனது 27 வயது மகளின் திருமண ஏற்பட்டதாக பரோல் கோருவதாகவும். அந்த குழந்தையை பெற்றெடுத்தவுடன் தான் அந்த குழந்தைக்கான எந்த விதமான பணிகளையும் செய்யவில்லை. அவளை பாலூட்டி, பள்ளிக்கு அனுப்புவது மற்ற எந்த விதமான பணிகளையும் அவளுக்காக நான் செய்யவில்லை. ஆனால் தற்போது மகளின் திருமணம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய இந்த நீதிமன்றம் தமக்கு அனுமதிக்க வேண்டும். லண்டனில் உள்ள தன்னுடைய மாமனார் தற்போது புற்றுநோயால் அவதிப்பட்டு இருப்பதாகவும் அவர் இறுதிக்காலத்தை அமைதியாக கழிக்கும் விதமாகவும் தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, உறவினர்களை சந்திக்க கோவில் வழிபாடுகள் செய்ய என ஆறு மாதம் சிறை விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜராகி இருந்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ. நடராஜன், மனுதாரருக்கு ஆறு மாதம் பரோல் வழங்க முடியாது. எனவும் சிறை விதிகளின்படி ஒரு குற்றவாளிக்கு அதிகபட்ச மாக இவ்வளவு நாட்கள் பரோல் வழங்க முடியாது என விதி உள்ளதாகவும் அதன்படியே பரோல் வழங்க முடியும் என தெரிவித்தார். தண்டனை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே பரோல் வழங்க முடியும் எனவும் எனவே மனுதாரருக்கு ஆறுமாதம் சிறை விடுப்பு வழங்க முடியாது என தெரிவித்தார். மேலும் இவர்களின் முன் விடுதலைக்கு அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பரோல் காலத்தில் அரசியல் கட்சியினரை மனுதரார் சந்திக்க கூடாது எனவும் பரோல் விதிகளின் படி செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

அப்போது நளினி தாம் ஏற்கனவே தனது தந்தையின் மரணம் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதற்காக பரோலில் வந்த போது நாள் ஒன்றிற்காக 16 ஆயிரத்து 300 ரூபாய் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு என அரசுக்கு செலுத்தியதாகவும் ஆனால் தற்போது நாளொன்றிற்கு இவ்வளவு தொகையை செலுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இருதரப்பு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 30 நாள் பரோல் (சிறை விடுப்பு) வழங்குவதாகவும், அவர் இந்த 30 நாட்களில் எங்கு தங்கியுள்ளார்? யாருடன் இருக்கிறார்? அவருக்கு உத்தவாதம் அளிப்பவர் யார்? என்பது உள்ளிட்ட விபரங்களை ஒரு வாரத்திற்குள் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அந்த விபரங்களை பெற்ற காவல்துறை அடுத்த 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இடங்கள் மற்றும் விபரங்கள் குறித்து ஆய்வு செய்து வேண்டும். பின்னர் பரோல் வழங்க வேண்டும். பரோல் காலத்தில் விதிகளின்படி மனுதரார் செயல்பட வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது அல்லது அவர்களை சந்திப்பது, அல்லது அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கூடாது. பரோல் காலத்தில் அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்படுகளுக்கு மனுதராரிடம் எந்த கட்டணமும் காவல்துறையும், அரசும் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டனர். பரோல் காலத்தில் விதிகளை மீறினால் சிறை விடுப்பை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தார். பரோல் காலம் முடிவடைந்தவுடன் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Chennai High Court Nalini Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment