Advertisment

எத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை

AG Perarivalan released : ராஜூகாந்தி கொல்லப்பட்ட வழங்கில் 19-வயதான பேரறிவாளன், பிரதமரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருந்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
எத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை

Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான ஏஜி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீகாந்தி கொல்லப்பட்ட வழங்கில் 19-வயதான பேரறிவாளன், பிரதமரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருந்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 1998-ம் ஆண்டு தடா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் எதிர்ப்பு செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.  ஆனால் 2014 இல் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

தற்போது ராஜூகாந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு ராஜூகாந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி ஸ்ரீஹரன் மற்றும் அவரது கணவர் இலங்கையைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு வழி வகுக்கும்.

ராஜூகாந்தி கொலை வழக்கில் முக்கிய காலநிகழ்வுகள்.

மே 21, 1991: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.20 மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். பெண் கொலையாளி தனு, ஒரு பெல்ட் வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ராஜூகாந்தி உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

மே 22, 1991: வழக்கை விசாரிக்க சிபி சிஐடி குழு அமைக்கப்பட்டது.

மே 24, 1991: மாநில அரசின் கோரிக்கையின் பேரில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ், மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

ஜூன் 11, 1991: இந்த வழக்கில் 19 வயதான ஏஜி பேரறிவாளனை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களைப் போலவே அவர் மீதும் பயங்கரவாதம் மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மே 20, 1992: சென்னையில் உள்ள சிறப்பு தடா விசாரணை நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 12 பேர் இறந்ததாகவும்,  3 பேர் தலைமறைவு உட்பட 41 குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 28, 1998: சில ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு, தடா நீதிமன்றம் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 26 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது.

மே 11, 1999: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட நால்வரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்யப்பட்டது.. மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 19 மரணக் தண்டனை குற்றவாளிகளை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் தடா விதிகளும் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.

ஏப்ரல் 2000: மாநில அமைச்சரவையின் பரிந்துரை மற்றும் சோனியா காந்தியின் பொது முறையீட்டின் அடிப்படையில் அப்போதைய தமிழக ஆளுநரால் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

2001: சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று மரண தண்டனைக் கைதிகள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்களை அளித்தனர்.

2006: பேரறிவாளனின் சுயசரிதையான ஆன் அப்பீல் ஃப்ரம் தி டெத் ரோ, வெடிகுண்டு தயாரிப்பதற்காக பேட்டரியை வாங்கியதாக நிர்ப்பந்தத்தின் பேரில் வாக்குமூலம் பெற்று சதியில் அவர் எப்படி சிக்கினார் என்று கூறியது.

ஆகஸ்ட் 11, 2011: 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.

ஆகஸ்ட் 2011: மூன்று மரணக் குற்றவாளிகள் செப்டம்பர் 9, 2011 அன்று தூக்கிலிடப்பட இருந்ததால், சென்னை உயர்நீதிமன்றம் மரணதண்டனை உத்தரவுக்கு தடை விதித்தது. மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 24, 2013: 'இரட்டை ஆபத்து' பிரச்சினையை எழுப்பிய நீதிபதி கே டி தாமஸ், 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை தூக்கிலிடுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார். இது அரசியலமைப்பு ரீதியாக தவறானது என்றும், அவர்கள் இன்றோ நாளையோ தூக்கிலிடப்பட்டால் ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கருதப்படும் என்று கூறியிருந்தார்.

நவம்பர் 2013: தடா காவலில் உள்ள பேரறிவாளனின் வாக்குமூலத்தை வாக்குமூலமாக மாற்றியதாக முன்னாள் சிபிஐ எஸ்பி வி தியாகராஜன் தெரிவித்தார். தான் வாங்கிய பேட்டரி வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் என்று பேரறிவாளன் ஒருபோதும் சொல்லவில்லை இவருக்கு இதுபற்றி தெரியாது என்றும் தெரிவித்திருந்தார்

ஜனவரி 21, 2014: வனக் கொள்ளையர் வீரப்பனின் உதவியாளர்கள் உட்பட 12 பேருடன் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றவாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது எஸ்சி.

2015: அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தமிழக ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். பின்னர் கவர்னரிடம் இருந்து பதில் வராததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 2017: தமிழக அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது.

செப்டம்பர் 6, 2018: தமிழக ஆளுநரின் அபரிமிதமான காலதாமதம் குறித்து, பேரறிவாளன் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியது.

செப்டம்பர் 9, 2018: அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை, ஏழு குற்றவாளிகளையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்தது.

ஜனவரி 2021: அமைச்சரவைப் பரிந்துரையின் மீது ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, மேலும் காலதாமதத்தைக் காரணம் காட்டி அவர்களை விடுவிக்க நீதிமன்றம் கட்டாயப்படுத்தப்படும் என்று எச்சரித்தது. ஆனால் மாநில அமைச்சரவை பரிந்துரையாக இருந்தாலும், இது தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்.

மே 2021: பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். புதிய திமுக அரசு பரோலை நீட்டித்து வந்தது.

மார்ச் 9, 2022: பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மே 11, 2022: வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்தது.

மே 18: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Tamilnadu Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment