scorecardresearch

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேர் நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

Rajiv Gandhi assassination case, SC, Nalini Sriharan, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு, Rajiv Gandhi case, Nalini release, india news, rajiv gandhi assassination news, Tamil indian express

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேர் நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களின் விடுதலை மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுவித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், நாகரத்தினம் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினர்.

இதையடுத்து, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் 1991-ல் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rajiv gandhi assassination case centre review petition against 6 convicts release

Best of Express