/tamil-ie/media/media_files/uploads/2019/11/a66.jpg)
Rajiv Gandhi assassination case convict AG Perarivalan was released on parole for a month - உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் - பரோலில் வெளி வந்த பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இன்று (நவ.12) சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறார்.
Rajiv Gandhi assassination case convict AG Perarivalan was released on parole for a month from Vellore Central Prison to take care of his ailing father on Tuesday.
Read more: https://t.co/G2wWv2Imswpic.twitter.com/qg47MnHLKX
— The Indian Express (@IndianExpress) November 12, 2019
பேரறிவாளன், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனை பார்க்கவும் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகவும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு தமிழக அரசு கடந்த நவ.7ம் தேதி அனுமதி அளித்த நிலையில், புழல் மத்திய சிறை நிர்வாகம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் வெளியில் அனுப்ப முடிவுசெய்தது.
இதையடுத்து, இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார் பேரறிவாளன். அங்கு, சில நடைமுறைகளுக்கு பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பேரறிவாளன், கடந்த 2017-ம் ஆண்டு தந்தை குயில்தாசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் 28 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்தார். இப்போது இரண்டாவது முறையாக இப்போதுதான் பரோல் கிடைத்திருக்கிறது.
ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது; அமைப்பு சார்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கக் கூடாது; பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது’ என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளன் வெளிவந்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.