ஆட்டோ மொபைல் துறையிலும் கால்பதிக்க இருக்கும் ஆண்ட்ராய்ட்

ரெனால்ட், நிசான் மோட்டார், மிட்ஸுபிஷி கார்களின் டேஷ்போர்ட்களில் ஆண்ட்ராய்ட் ஆட்டோவை இண்ட்டகிரேட் செய்ய முடிவு

ஆண்ட்ராய்ட் ஆட்டோ : ரெனால்ட், நிசான் மோட்டார், மிட்ஸுபிஷி போன்ற கார் நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்த செல்ல முடிவு செய்திருக்கிறது.  இந்த மூன்று நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியாக இருக்கும் கார்களின் டேஷ்போர்ட்களில் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தினை பயன்படுத்த இருக்கிறது.

ஆல்பாபெட் இங்க் நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி மேப்பிங் மற்றும் நேவிகேஷனை உபயோகித்து வருகிறது இந்த நிறுவனங்கள். நிறைய ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ஆப்பிளின் கார்பிளே மற்றும் ஆண்ராய்ட் ஆட்டோவினை மொபைலின் துணை கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள்.

கூகுள் மற்றும் ஆப்பிளை போன் வழியாக பயன்படுத்தும் போது ஓட்டுநர் எங்கே இருக்கிறார், எங்கே அவர் செல்ல வேண்டும், அருகில் இருக்கும் கடைகள், மற்றும் நிறுவனங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அதனால் நிறைய நிறுவனங்கள் இந்த இரண்டு செயலிகளையும் அடுத்த படிக்கு உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  இந்த செயலிகளின் பயன்பாட்டினை நேரடியாக டேஷ்போர்டில் பயன்படுத்தும் போது போன்களின் தேவை முற்றிலும் ஒரு ஓட்டுநருக்குத் தேவைப்படாது.

ஆண்ட்ராய்ட் ஆட்டோ – ஆண்ட்ராய்ட் செயலிகள்

இதற்கு முன்பு ஆண்ட்ராய்ட் செயலிகளை பயன்படுத்தும் முறையை வால்வோ கார்கள் மட்டுமே அறிவித்திருந்தது என கார்ட்னெரில் ஆராய்ச்சி அதிகாரியாக செயல்படும் மைக் ராம்ஸே கூறியிருக்கிறார்.

ரெனால்ட் – நிசான் – மிட்ஸூபிஷி கார்கள் கொண்டு வர இருக்கும் இந்த புதிய டேஷ்போர்டில் ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படும் செயலிகள், பாடல்கள், மற்றும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுள் அசிஸ்டெண்ட்டினை பயன்படுத்தி வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாகவும் வாகனங்களையும் செயலிகளையும் இயக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

Web Title:

Renault nissan teams with google to enable android auto onto their cars

Related Posts
கோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா!
கோலி மனதுக்கு நெருக்கமான புதுவரவு – இதற்கு விலையெல்லாம் ஒரு மேட்டரா!

தல தோனி பெட்ஸ், பைக், கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக பைக்குகள் மீது வெறித்தனம் கொண்டவர் தோனி. அவரது பைக் வெரைட்டிகளை அடுக்கவே தனி கேரேஜ் வைத்திருக்கிறார்.  அதேபோல், கேப்டன் விராட் கோலியும் இதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல. ஆனால், இவரது காதல் பைக்குகளை தாண்டி கார்கள் மீது தான். அதிலும், ஆடி கார்கள் கோலியின் பெஸ்ட்டி எனலாம். இந்தியாவின் எவர்கிரீன் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பாபு நட்கார்னி மரணம் : பிரபலங்கள் இரங்கல் கோலியிடம், […]

பட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)
பட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)

பொங்கலுக்கு வெளியான தனுஷின் பட்டாஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடி வருகிறது. எனினும், விடுமுறை காலம் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் கூடுகிறது. பட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு! இப்படத்தின் கதை கிட்டத்தட்ட ‘ஏழாம் அறிவு’ படத்தை போன்றே உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு ரசிகர்களாலும் சரி, விமர்சகர்களாலும் வெகுவாக பாராட்டப்படுகிறது.  அந்த அளவுக்கு தனுஷும், சினேகாவும் சிறப்பாக நடித்துள்ளனர். பட்டாஸ் படத்தில் அடிமுறை […]

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close