28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு மாத ஜாமீனில் வெளிவரும் நளினி!

இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனார் சங்கரநாராயணன் அவருடைய இறுதிச் சடங்கிற்காக 12 மணிநேரம் பரோலில் 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார்

Arun Janardhanan

Rajiv Gandhi assassination case convict Nalini Parole : ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி மற்றும் இந்தியாவின், சிறைகளில் அதிகமாக வாழ்ந்தார் முதல் இந்தியப் பெண் என்றும் அழைக்கப்படும் நளினி ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார்.

தன்னுடைய மகள் ஹரித்ரா ஸ்ரீஹரணின் திருமணத்திற்காக தற்போது ஒரு மாத பரோலில் வேலூர் மத்திய சிறையில் இருந்து இன்றோ அல்லது நாளையோ வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் 5ம் தேதி இவருக்கு இந்த பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 28 ஆண்டுகளில் இப்படியாக அதிக நாளில் நளினி வெளியே தங்குவது இதுவே முதல் முறையாகும்.

மத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அவர் தன்னுடைய அம்மா பத்மாவதி, சகோதரி கல்யாணி, மற்றும் சகோதரன் பாக்யநாதன் மற்றும் உறவினர்களுடன்  இருப்பதற்காக நளிக்கு வேலூரில் வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நாட்களில் இவர் இங்கு மட்டுமே தங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அரசியல் ஊடகம் போன்ற எந்த பிரச்சனையும் இன்றி இருக்க அவர் விரும்புவதால் அவர் தன்னுடைய சென்னை, இராயப்பேட்டை இல்லத்திற்கு வர மாட்டார் என்று நளினியின் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனார் சங்கரநாராயணன் அவருடைய இறுதிச் சடங்கிற்காக 12 மணிநேரம் பரோலில் 2016 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஹரித்ரா ஸ்ரீஹரன்

ஹரித்ரா ஸ்ரீஹரன் நளினி சிறையில் இருக்கும்போதே பிறந்தவர். சிறிது காலங்கள் தன் அம்மாவுடன் சிறையிலேயே இருந்தார். அவருடன் சிறைவாசம் பெற்ற கோவைவாசி ஒருவர் ஒருவர் ஹரித்ராவை அழைத்து கோவையில் வேறு ஒரு பெயரில் மூன்று வருடங்கள் ஒரு பள்ளியில் படிக்க வைத்தார்.  பின்பு ஸ்ரீஹரனின் தாயார் சோமணி அவரை இலங்கைக்கு அழைத்து சென்றுவிட்டார் இலங்கையிலிருந்து அவர்கள் லண்டனுக்கு சென்று விட்டனர் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  நளினியும், முருகனும் தங்களின் மகளை பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது என்று அவரின் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

நளினிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை 2000 ஆண்டில் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.  ஆங்கில பட்டதாரியான அவர்  ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஸ்ரீபெரும்புதூரில் இப்படி ஒரு மாபெரும் சதி திட்டம் நடக்கும் வரையில் தன்னுடன் பயணித்தவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்காக திட்டமிட்டு உள்ளனர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்று நளினிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் ஒரு பகுதியில் நீதிபதி டி.கே. தாமஸ்  கூறியுள்ளார்.

இந்த கொலையில் பங்கேற்ற மிகவும் அமைதியான முக்கியமான ரோல் ஏதும் இல்லாத குற்றவாளி இவர் என்றும் நீதிபதி அந்த தீர்ப்பில் கூறியுள்ளார். தனு கொலை செய்யப் போகிறார் என்று தெரிந்தும் அதனை எதிர்க்கவோ தடுக்கவோ நளினி முன்வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close