Advertisment

ராஜீவ் படுகொலையில் விடுவிக்கப்பட்ட சாந்தனின் உடல் நேற்று மாலை நல்லடக்கம்

கொழும்புவிலிருந்து வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு வவுனியா, கிளிநொச்சி உட்பட வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

author-image
WebDesk
New Update
Srilanka

Sri Lanka

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், 2022-ம்ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

Advertisment

இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஜன.27-ம் தேதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் பிப்ரவரி 29 அன்று சாந்தன் காலமானார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் மகேஸ்வரி, பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் மரணமடைந்தார்.

Sri lanka

சாந்தனின் உடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு கொண்டு வரப்பட்டது. கொழும்புவிலிருந்து வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு வவுனியா, கிளிநொச்சி உட்பட வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள குமரப்பா நினைவு சதுக்கத்தில் உடல் வைக்கப்பட்டு, அங்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வல்வெட்டித்துறையில் சாந்தனின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின் எள்ளங்குளம் இந்து மயானத்தில் நேற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, என்மகன் வருவான் அவனுக்கு என் கரத்தால் உணவூட்டுவேன் என தள்ளாடும் வயதிலும் காத்திருந்த அவரது தாய், என் அன்புக்கரத்தால் அன்ன மூட்டக் கொடுத்து வைக்காத பாவி நான் என கதறி, தன் திருக்கரத்தால் தன் அன்பு மகன் சாந்தனிற்கு திருநீறு நெற்றியிலிட்டு, இறுதி அஞ்சலி செலுத்தியது காண்போரை கதறச் செய்தது.

செய்தி: க.சண்முகவடிவேல்                                                        

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment