Advertisment

ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் குற்றவாளிகள்; இலங்கை சென்ற முருகன் ஜெயக்குமார், ராபர் பயஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், நவம்பர் 2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 7 குற்றவாளிகளில் இவர்களும் அடங்குவர்.

author-image
WebDesk
New Update
Rajiv Gandhi 1

முருகன் என்கிற ஸ்ரீஹரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை விமானம் மூலம் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (ராஜீவ் காந்தி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 3 பேர் புதன்கிழமை இலங்கை சென்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Three ex-convicts in Rajiv Gandhi assassination return to Sri Lanka

முருகன் என்கிற ஸ்ரீஹரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை விமானம் மூலம் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 2022-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட வழக்கில் ஏழு குற்றவாளிகளில் இவர்களும் அடங்குவர்.

இதன் மூலம், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 3 பேர் புதன்கிழமை அவர்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.

முன்னதாக, இவர்கள் விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இங்கு வந்த அவர்கள் இன்று கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.

வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்.ஆர்.ஆர்.ஓ) நாடு கடத்தும் உத்தரவை பிறப்பித்தவுடன் அவர்கள் தாயகம் திரும்பலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.

முன்னதாக, அவர்கள் நாடு திரும்புவதற்கான பயண ஆவணங்களை இலங்கை தூதரகம் வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மற்றொருவர் சாந்தன் சமீபத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டவர்களில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இந்த 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment