ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 1991ம் ஆண்டு தமிழ் நாட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அந்த பிரச்சாரத்தில் மனித வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றதால் உடல் சிதறி உயிர் இழந்தார் ராஜீவ் காந்தி. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் 19 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பாயஸ், மற்றும் ரவிச்சந்தரன் ஆகியோர் 27 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு
அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக பலவருடங்கள் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இதனைத் தொடர்ந்து 9ம் தேதி அமைச்சரவையை கூட்டியது தமிழக அரசு. அதில் 7 பேரின் விடுதலையினை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அரசு.
இந்திய அரசாணை 161ன் படி ஆளுநருக்கு கைதிகளை மன்னிக்க, விடுதலை செய்ய, தண்டனை காலத்தைக் குறைக்க உரிமைகள் உண்டு. அதன் அடிப்படையில் 7 நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது அமைச்சரவை.
ஏற்கனவே ஆர்ட்டிகள் 161ன் படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் டிசம்பர் 30, 2015 அன்று மனு ஒன்றினை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை
மே மாதம் 21, 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பால் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 9 காவல் துறையினர் உட்பட 14 நபர்கள் ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் 19 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது விடுதலைக்காக காத்திருக்கும் 7 நபர்களில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை அளித்திருந்தது சிறப்பு நீதிமன்றம் குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளன் 19 வயதில் இருக்கும் போது கைது செய்யப்பட்டார். 26 வருடங்கள் கழித்து முதல் முறையாக பரோலில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு கடந்து வந்த பாதைப் பற்றி ஒரு பார்வை