Advertisment

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்: '7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி' - அற்புதம்மாள் உருக்கம்

Tamil Nadu Cabinet Meeting on Rajiv Gandhi Assassination Case: ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுவிப்பு-தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளனை விடுவிக்க தீர்மானம்

Rajiv Gandhi Assassination Case Convict: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் நீடித்தது. மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை முன் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அதை இன்றே ஆளுனருக்கு அனுப்ப இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

Advertisment

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வேறு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றியது. பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜீவ் காந்தி, இந்தியாவின் முன்னாள் பிரதமர்! 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் கொலை செய்யப்பட்டார்.

தமிழக அமைச்சரவை : 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய ஆலோசனை To Read, Click Here

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், நளினி, ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களை விடுவிக்க பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு அரசே இது குறித்து முடிவு எடுக்கலாம் என கூறியிருக்கிறது. எனவே இது குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 9) மாலை நடக்கிறது.

Rajiv Gandhi Assassination Case Convict Seeks Early Release, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து ஆலோசனை Tamil Nadu Cabinet Meeting to Decide on Rajiv Gandhi Convict Release: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து ஆலோசனை

Tamil Nadu Cabinet Meeting on Rajiv Gandhi Assassination Case: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுவிப்பு-தீர்மானம்

07:35 PM: செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், "முழு நிம்மதியை அளித்துள்ளார் முதல்வர் பழனிசாமி; அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

7:05 PM: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் ஆணையை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

6:05 PM: 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரையை இன்றே ஆளுனரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

6:00 PM: பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டவும், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தகவலையும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

5:55 PM: 7 பேரையும் விடுவிக்க முடிவு செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரிவு 161-ன் படி முன் விடுவிப்பு செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்வதாக ஜெயகுமார் கூறினார்.

5:45 PM: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சற்று நேரத்தில் நிறைவு பெறலாம் என தெரிகிறது. கூட்டம் முடிந்ததும் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்கள். அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

5:15 PM: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஒன்றேகால் மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுக்காக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள்.

4:45 PM: இயக்குனர் பாரதிராஜா இன்று அளித்த பேட்டியில், ‘ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டு, இளமையை இழந்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ராகுல் காந்தி மன்னித்துவிட்டதற்கு நன்றி. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

4:35 PM: தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஏற்கனவே கடந்த இரு தினங்களாக அளித்த பேட்டிகளில், ‘ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேரையும் விடுவிக்கும் தமிழ்நாடு அரசு முடிவில் மாற்றம் இல்லை’ என குறிப்பிட்டனர். எனவே அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். அந்தத் தீர்மானத்தை முதல்வர், துணை முதல்வர், சட்ட அமைச்சர் உள்ளிட்டோர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வழங்க வாய்ப்பு இருக்கிறது.

4:30 PM: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை அளித்தப் பேட்டியில், ‘ராகுல் காந்தியே அவர்களை மன்னித்துவிட்டதாக கூறிவிட்டதால், தமிழக அரசு இதில் எடுக்கும் முடிவைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என குறிப்பிட்டார்.

4:20 PM: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனர் உடனடியாக ஏற்பாரா?, கிடப்பில் போடுவாரா? சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தனி முடிவு எடுப்பாரா? என விவாதங்கள் நடக்கின்றன.

4:00 PM: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

Rajiv Gandhi Assassination Case Convict Seeks Early Releaseதமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், Tamil Nadu Cabinet Meeting to Decide on Rajiv Gandhi Convict Release: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் காமராஜ் வருகை

3:45 PM: அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் தலைமைச் செயலகம் வர ஆரம்பித்தனர்.

3:30 PM: ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை 4 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

 

Rajiv Gandhi Tamil Nadu Government A G Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment