ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவு ஒரு முக்கிய அம்சத்தையும் வெளிப்படுத்துகிறது – இந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்ட மற்றொரு தண்டனைக் கைதியான ஏஜி பேரறிவாளனின் நிலையான சட்டப் போராட்டம், மீதமுள்ள ஆறு பேரின் விடுதலையில் பங்கு வகித்தது.
வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்த நளினி மற்றும் மதுரையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் இருவரும் இந்தியர்கள். சாந்தன் (டி.சுதந்திரராஜா), ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் நளினியின் கணவர் முருகன் ஆகியோர் இலங்கைப் பிரஜைகள்.
1991-ல் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் அனைவரும் இளைஞர்களாக இருந்தனர். நளினியும் முருகனும் கைது செய்யப்படுவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். கைது செய்யும் போது நளினி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சிறையில் தான் பெண்குழந்தை பிறந்தது. ஐரோப்பிய நாட்டில் உள்ள முருகனின் தாயார் தான் நளினியின் மகளை தற்போது கவனித்து வருகிறார். இந்த வழக்கில் நளினியின் தாய் பத்மா மற்றும் சகோதரர் பாக்யநாதன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.
இதனிடையே, 1999 இல் விடுவிக்கப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு நடந்தது போல், இலங்கை பிரஜைகள் அவர்கள் விரும்பும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
2001ஆம் ஆண்டு நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில், பேரறிவாளனின் விடுதலை மீதமுள்ள 6 குற்றவாளிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது, அவரது வழக்கில் பரிசீலிக்கப்பட்ட காரணங்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, வெள்ளிக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய நீதிபதி கே டி தாமஸ், சீர்திருத்த நீதியை தான் நம்புவதாகவும், அவர்கள் அனைவரும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தான் கருதுவதாகவும் கூறினார்.
நான் ஒரு abolitionists என்று சொல்வேன். இந்த நேரத்தில், அவர்கள் இப்போதாவாது விடுவிக்கப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், என்று அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே டி தாமஸ்,1999 ஆம் ஆண்டு ஏஜி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கியவர். பின்னர், 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கில் ‘இரட்டை ஆபத்து’ பிரச்சினையை எழுப்பிய தாமஸ், 23 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை தூக்கிலிடுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார். இது 2014ம் ஆண்டு மூன்று குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் குறைக்கும் உத்தரவுக்கு வழிவகுத்தது.
இது தவிர, நீதியரசர் தாமஸ், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியிடம் இந்த வழக்கில் பெருந்தன்மை காட்டுமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். அதோடு, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் 14 ஆண்டுகள் சிறைதண்டைனைக்குப் பிறகு 1964-ல் விடுவிக்க மத்திய அரசு எடுத்த முடிவையும் அவர் மேற்கோள் காட்டி இருந்தார்.
முன்னதாக பேரறிவாளன் விடுதலையான போது, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய தாமஸ், பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள்தான் முழுப் புகழுக்கும் உரியவர். மாநில அரசின் அறிவுரைப்படி செயல்பட வேண்டிய ஆளுநர், அதை ஏன் புறக்கணித்தார்? மேலும், பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“