/indian-express-tamil/media/media_files/2024/10/27/F4Rsddsa7jdCq2gdVXfj.jpg)
த.வெ.க மாநாட்டில் தி.மு.க-வைத் தாக்கிப் பேசிய விஜய்க்கு தி.மு.க தரப்பில் இருந்து, அக்கட்சியின் மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தியிடம் இருந்து முதல் ரெஸ்பான்ஸ் வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க-வை நேரடியாகத் தாக்கிப் பேசிய நிலையில், “விஜய் நடித்த வி. சாலை படம் கொஞ்ச நாள் ஓடும்” என்று தி.மு.க தரப்பில் இருந்து அக்கட்சியின் மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்றது. மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான த.வெ.க தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
த.வெ.க மாநாட்டில் பேசிய விஜய், “எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள த.வெ.க-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?” என்று விஜய் தி.மு.க-வை நேரடியாகவே தாக்கிப் எழுப்பினார்.
இந்நிலையில், த.வெ.க மாநாட்டில் தி.மு.க-வைத் தாக்கிப் பேசிய விஜய்க்கு தி.மு.க தரப்பில் இருந்து, அக்கட்சியின் மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்!!
— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) October 27, 2024
Good flim 👏👏
100 நாள் திரையரங்கிளும்!!
OTT யில் கொஞ்சநாளும் ஓடும்!’
வாழ்த்துகள் @actorvijay !!
“விஜய் நடித்த வி. சாலை படம் கொஞ்ச நாள் ஓடும்” என்று விஜய்க்கு தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன். ‘குட் ஃபிலிம்’; 100 நாள் திரையரங்கிலும், ஓ.டி.டி-யில் கொஞ்சநாளும் ஓடும். வாழ்த்துகள் விஜய்” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.