எம்.எம்.சி-யில் 70 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா: தனி வார்டில் சிகிச்சை
கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ முகக்கவசம் மற்றும் பாதுக்காப்பு கவச உடை தரமற்றதாக உள்ளது என்பதை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறித்து வருகிறோம்.
கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ முகக்கவசம் மற்றும் பாதுக்காப்பு கவச உடை தரமற்றதாக உள்ளது என்பதை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறித்து வருகிறோம்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கான பிரத்தியோக மருத்துவமனையாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் மருத்துவக் கல்லூரியைச் (மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் - எம்.எம்.சி) சேர்ந்த 70 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ வாட்டாரங்களில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
Advertisment
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 70 முதுநிலை மருத்துவர்களும், தற்போது அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜாஜி மருத்துவமணை டீன் ஆர். ஜெயந்தி கூறுகையில், " கடந்த 24 மணி நேரத்தில் 70 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டது உண்மை தான். இதற்கு முக்கிய காரணம் அதிகமான கொரோனா பரிசோதனை. எங்கள் கல்லூரியில் தொடர்ச்சியான, திட்டமிட்ட கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டும் இதுவரை, 2,500க்கும் அதிகமானா கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. முறையான, வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் நோய்த் தொற்று ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு, மருத்துவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்தரநாத் இது குறித்து கூறுகையில்," 70 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கவலை அளிக்கிறது. கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ முகக்கவசம் மற்றும் பாதுக்காப்பு கவச உடை தரமற்றதாக உள்ளது என்பதை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் அதிகமான மருத்துவப் பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதால் தான் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்படுகிறது என்ற கூற்றை ஏற்க மறுத்த அவர், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜாஜி மருத்துவக் கல்லூரி ஒன்று விதிவிலக்கு அல்ல. அநேக, அரசு மருத்துவமனைகளில் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்கள் பின்பற்றவில்லை என்பதே முறையான பதில். உதாரணமாக, ஏழு நாட்கள் தொடர்ந்து கொரோனா மருத்துவப் பணியில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர், கட்டாயம் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் 5 மற்றும் 10வது நாளில் அந்த மருத்துவர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், தொற்றுப் பரவலின் தன்மையைக் குறைக்க மருத்துவர் ஒருவர் தொடர்ந்து 6 மணி நேரம் தான் பணியாற்ற வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் அரசு மருத்துவமனையில் முறையாக பின்பற்றவில்லை" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil