/tamil-ie/media/media_files/uploads/2019/03/rajiv-case-human-chain-...............jpg)
arputhammal, human chain protest, சென்னை, ராஜீவ் காந்தி கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும், ஆளுனர் அதில் நடவடிக்கை எடுக்கவில்லை.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் இது குறித்து தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனாலும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
7 பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று நடந்தது.
இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை இதில் பங்கேற்றன. இந்தக் கட்சிகளின் சார்பில் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் மற்றும் பலர் வந்திருந்தனர். பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திமுக, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.