தூத்துக்குடி விசாரணை: நேரில் ஆஜராக விலக்கு கேட்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட விதமாக நேரில் தோன்றுவது  பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நேரில் தோன்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .

By: Updated: February 22, 2020, 05:18:45 PM

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். நூறு நாட்களுக்கு மேல் நடைபெற்ற அமைதி போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது. 2018 ஆம் ஆண்டு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 மக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் பலியானார். இந்த செயலுக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களது கண்டங்களை பதிவு செய்தனர்.

தூத்துக்குடியில் நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த், உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,”மக்கள் நூறு நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த குறிப்பிட்ட நாளன்று  விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டனர். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த சமூக விரோதிகளை அடக்கனும். தற்போதைய அரசு இது போன்ற சமூக  விரோதிகளையும், விஷக் கிருமிகையும் அடைக்கி வைக்க வேண்டும்”  என்று தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டங்களை பதிவு செய்தனர். விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் என்று யாரை ரஜினி சொல்கிறார்? என்ன ஆதாராம்?  ரஜினி ஏன் காவல் துரையினரிடம் புகார் கொடுக்கவில்லை ? போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.


இந்த துப்பாக்கிச்சூடு விசாரித்து வந்த , அருணா ஜெகதீசன் ஒரு நபர் விசாரணை ஆணையம், இதுவரை 18 கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது. மேலும், வரும் 25ம் தேதி ரஜினிகாந்த்  நேரில் வந்து விளக்கம் தரவேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்  என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினிகாந்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,” நடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட விதமாக நேரில் தோன்றுவது  பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், தூத்துக்குடி வன்முறை தொடர்பாக நடிகரிடம் கேட்க விரும்பும் ஆணையத்தின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில் அளிக்க விரும்புவதாகவும்” அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Rajnikanth seeks exemption from personaal apperance thoothukudi sterlite violence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X