ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம்

ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவில் இந்திய தலைவராக இருந்தார். அதை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியுடன் இணைந்தார்.

ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். அதன் பின்னர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்பதை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்று மாற்றினார். ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்தார்.

இதையடுத்து, வேலூர் மாவட்டம், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவில் இந்திய தலைவராக இருந்தார். பின்னர் அங்கிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியுடன் இணைந்தார். முதலில் இணைய தள பொறுப்பாளர் என்று சொல்லப்பட்டது. இப்போது அவரே மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ராஜூ மகாலிங்கம், அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் படித்தவர். டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் திரிவரியோ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சி.எம்.டி.யாகவும், அதன்பின் லைக்கா மொபைல் (இங்கிலாந்து) நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் லைக்கா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன், ரஜினியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து ரஜினிகாந்த் அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

×Close
×Close