மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் இவர்கள்தானா ? பரபரக்கும் அரசியல் களம்

ADMK Rajya sabha MPs : மாநிலங்களவையில் காலியாகும் 6 உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக தங்களது வேட்பாளர்கள் தேர்வில்...

மாநிலங்களவையில் காலியாகும் 6 உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக தங்களது வேட்பாளர்கள் தேர்வில் மும்முரம் காட்டி வருகிறது.

திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, டி.கே, ரங்கராஜன், விஜிலா சத்யானந்த், முத்துகருப்பன், செல்வராஜ் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 6 உறுப்பினர்களில் 3 பேர் திமுக சார்பிலும், 3 பேர் அதிமுக சார்பில் களம் காண உள்ளனர்.

திமுக அறிவிப்பு : திமுக, தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் என் ஆர் இளங்கோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில், கே பி முனுசாமி, தம்பிதுரைக்கு வாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில், அந்த 3வது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்காததால், வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்து இழுபறியாகி வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் முனுசாமி, கிருஷ்ணகிரி தொகுதியிலும், தம்பிதுரை, கரூர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தங்களது வெற்றியை பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின் கட்சி ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவி அவரிடம் பறிக்கப்பட்டது. 2016 சட்டசபை தேர்தலில், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் பெரியசாமியிடம் வெற்றியை பறிகொடுத்தார்.

பின் பன்னீர்செல்வம் அணியில் இருந்த நத்தம் விஸ்வநாதன், முதல்வர் பழனிசாமியின் அணிக்கு மாறி, இரு அமைச்சர்களின் துணையுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற கடும் போராட்டம் நடத்தி வருகிறார்.

பி.ஹெச். மனோஜ் பாண்டியன், கோகுல இந்திரா முன்னாள் எம்.பி. மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்டோரும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏப்ரலில் பதவிக்காலம் நிறைவடைய உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா மற்றும் முத்துக்கருப்பன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close