இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடபடுகிறது. ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். ஆகவே, இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இதில் புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. மேலும் கீழே அமர்ந்து தொழுகை செய்ய முடியாதவர்களுக்காக நாற்காலி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.
சிறப்பு தொழுகை முடிந்தவுடன் பாலஸ்தீனம்-காசாவில் அமைதி நிலவ வேண்டியும், வக்ஃபு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கைகளில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு பதாகைகளை ஏந்தி இஸ்லாமியர்கள் சிலர் முழக்கங்களை எழுப்பினர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/31/AKZaA2AlpPWQtA0FIgEs.jpeg)