ரமலான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி - தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை
ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை
ramadan nombu kanji free rice case madras high court
ரமலான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Advertisment
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்க மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமான ரம்ஜானின் நோன்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை ஏப்ரல் 16ல் அழைத்த தமிழக அரசு நடத்திய ஆலோசனையில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்க முடிவெடுத்தது. அதனடிப்படையில், 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு 5 ஆயிரத்து 440 மெட்ரிக்டன் பச்சரிசி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி இந்து முன்னணி செயலாளர் குத்தாலநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை என்பதால், ரம்ஜான் நோன்புக்காக அரிசி வழங்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டுமனவும் அதே போல் அனைத்து மதத்தினருக்கும் இலவச அரிசி வழங்க உத்தரவிட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே ரேசன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு எண்ணை உள்ளிட்ட பொருள்கள் வழங்கபட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து ரமலான் மாதம் நோன்பு இருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசு மே 7ல் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”