அன்புமணி ஆதரவாளர்களிடம் சமூக வலைதள கணக்குகள்: டி.ஜி.பி-யிடம் ராமதாஸ் பரபர புகார்

அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக்கோரி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டி.ஜி.பி-யிடம் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக்கோரி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டி.ஜி.பி-யிடம் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
PMK founder S Ramadoss about Anbumani Kumbakonam Tamil News

பா.ம.க-வின் உட்கட்சி விவகாரம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக்கோரி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டி.ஜி.பி-யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

Advertisment

இது தொடர்பான புகாரை ஆன்லைன் வாயிலாக ராமதாஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களிடமிருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தரக்கோரியும், அதன் பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளை திரும்பப் பெற்றுத் தரக்கோரியும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே எழுந்துள்ள மோதல், கட்சிக்குள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், ஒருவருக்கொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தொடர்ச்சியாக முன்வைக்கின்றனர்.

முன்னதாக, தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி கண்டெடுக்கப்பட்டதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். குறிப்பாக, தன்னுடைய நாற்காலிக்கு அருகிலேயே அந்தக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாகவும், விலை உயர்ந்த அந்தக் கருவி லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், இதனை செய்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்னவென்று ஆராய்ந்து வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டதாகவும், அவற்றை மீட்டுத் தரக் கோரியும் ராமதாஸ் சார்பில் டி.ஜி.பி-க்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல், கட்சி நிர்வாகிகள் இடையேயும் பிளவை உருவாக்கியுள்ளது. இருவரின் ஆதரவாளர்களும் எதிர் தரப்பினர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், ராமதாஸ் தரப்பில் இருந்து டி.ஜி.பி-க்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ள புகார், பா.ம.க-வினரிடம் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: