பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கொள்ளுப் பேரனின் பிறந்த நாள் விழா சென்னையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசியலில் பழம்பெரும் பாரம்பரியம் கொண்டவர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான இவர், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்றளவும் கள அரசியலில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இவரது மகனான அன்புமணி ராமதாஸ் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பதவி வகிக்கிறார். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர் முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸின் கொள்ளுப் பேரன் பிறந்த நாள் விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது தனது கொள்ளுப் பேரனுக்கு ராமதாஸ் தாலாட்டுப் பாடலை பாடி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வு அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
நன்றி - சன் நியூஸ் தமிழ்