'அவரைப்போல் ஞான ஒளி எனக்கு இல்லை': ஸ்டாலினுக்கு ராமதாஸ் பதிலடி

தனக்கு வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டு தி.மு.க தலைமையிலான அரசை விமர்சிப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தனக்கு வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டு தி.மு.க தலைமையிலான அரசை விமர்சிப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Mk Stalin Ramadoss

தனக்கு வேறு வேலை இல்லாததால் அறிக்கை விட்டு தி.மு.க தலைமையிலான அரசை விமர்சிப்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

'அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள விவகாரத்தில், தமிழக மின்வாரியத்தின் பெயரும் இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறினார். 

Advertisment

முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதில் பா.ம.க.,வினர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், பா.ம.க., தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவதை தடுக்க முடியாது' என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார். மேலும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, நா.த.க. தலைவர் சீமான், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தமிழகம் முழுதும் பா.ம.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டாலினுக்கு பதிலடி 

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ' அவரைப் போல பிரகாச அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லை தான். சாதாரண ஞான ஒளி அல்ல. அரசியல் ஞான ஒளியை நான் பெறவில்லை.  நான் என்ன செய்ய முடியும்? எனக்கு வருத்தமாக இருக்கிறது,' எனக் கூறினார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Dr Ramadoss Cm Mk Stalin Pmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: