/indian-express-tamil/media/media_files/2025/08/07/ramadoss-pmk-leader-press-meet-anbumani-tamil-news-2025-08-07-14-00-35.jpg)
"பா.ம.க-வினர் என்னை நிறுவனராக மட்டும் பார்க்க மாட்டார்கள். சிலர் குலதெய்வம், கடவுள் என்பார்கள். அப்படி கூறிவர்களை பணம் கொடுத்து அன்புமணி தன்பக்கம் இழுத்து கொண்டார்." என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அன்புமணி நிறைய பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். அன்புமணி தைலாபுரத்தில் என்னை சந்தித்தபோது கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக சொல்கிறார். நான் ஏன் பேச மறுக்கபோகிறேன். 46 ஆண்டு காலம் கட்டி காப்பாத்தி வைத்த கட்சியை அவரிடம் கொடுக்க வேண்டும் எனவும், கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்க கூடாது எனவும் அவர் சொல்கிறார்.
அன்புமணி சார்பாக சமாதானம் பேச வந்த கட்சி அதிமேதாவிகள் அனைவரும் இதே பல்லவியை பாடியதால் கடைசி பேச்சுவார்த்தையின் போது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அன்புமணி தனது அம்மாவை மட்டும் பார்த்துவிட்டு நான் அன்புமணியை சந்திக்கவில்லை என பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். பா.ம.க-வில் இருக்கும் 34 அமைப்புகளில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து தனக்கு எதிராக செயல்பட கூறினார்.
அய்யா அய்யா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி தான். கட்சி அங்கீகாரம் இல்லாமல், சின்னம் இல்லாமல் இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வேட்பாளர், கட்சி அங்கீகாரம் செய்வது சம்மந்தமாக நிறுவனர் என்ற முடிவெடுத்ததை நான் தான் கட்சி வேட்பாளர், கூட்டணியை முடிவு செய்வேன் என்று கூறியது தான் பிரச்சனை. கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை மாற்றுவது புதியதாக நியமிக்க தனக்கு அதிகாரம் என அன்புமணி கூறுகிறார்.
நிறுவனர் என்ற முறையில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பா.ம.க-வை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு, தைலாபுரம் இல்லதில் கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரண்களை விளையாடுவதை ஏற்க முடியாது. கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன். மக்கள் என் மேல் உயிரை வைத்துள்ளார்கள். வஞ்சனையால், சூதுவால் உறிஞ்சி எடுக்க பா.ம.க-வை அன்புமணி எடுத்து கொள்வேன் என்கிறார். பணத்தை வைத்து என் மீது உயிரை வைத்திருந்த சிலரை அன்புமணி பக்கம் இழுத்து கொண்டுள்ளார்.
பா.ம.க-வினர் என்னை நிறுவனராக மட்டும் பார்க்க மாட்டார்கள். சிலர் குலதெய்வம், கடவுள் என்பார்கள். அப்படி கூறிவர்களை பணம் கொடுத்து அன்புமணி தன்பக்கம் இழுத்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்களை தன்னால் தான் போட முடியும் என்று கூறி பை பையாக பொய்யை அன்புமணி கூறுகிறார். கட்சியில் அன்புமணியை எம்.பி ஆக்கிய போது தன்பக்கம் கட்சியை இழுக்க வேண்டுமென உள் அடி வேலைகளை பார்க்க துவங்கினார். பா.ம.க-வை ஆலமரமாக வியர்வை சிந்தி உருவாக்கியதை அதிலுள்ள கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்.
பணத்தை வைத்து கொண்டு விலைக்கு வாங்கி பொய் பொய்யாக அன்புமணி கூறுகிறார். கட்சியின் வளர்ச்சிக்காக அன்புமணி எதையும் செய்யவில்லை. பா.ம.க-வை பெரிய கட்சியாக உருவாக்கியது நான் தான். நான் அன்புமணிக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நல்ல பள்ளியில் பயில வைத்து எம்.பி ஆக ஆக்கி, ராஜ்யசபா உறுப்பினராக்கி எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்தேன். காசு கொடுத்து கட்சிக்காரர்களை பொருளை விலைக்கு வாங்குவது போல் அன்புமணி செய்கிறார்.
தருமபுரியில் சுப்ரமணி ஒ.கே.எஸ். என்னை சந்திக்க வந்த போது, அவருக்கு தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன், 5 ஆயிரம் கொடுத்து தடுத்தார். இது போன்று என்னை சந்திக்க வருபவர்களை சந்திக்க விடமால் நிறைய வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், ஒ.கே.எஸ் அந்த பணத்தை எம்.எல்.ஏ முகத்தில் வீசி விட்டு என்னை சந்தித்ததார். பணத்திற்காக சமூக வலைதளங்களில் என்னை விமர்சிகிறார்கள். கூட்டம் போடுவது, நடைபயணம் செல்வது கிரேனில் மாலை போடுவது எல்லாம் பணத்தை கொடுத்து அன்புமணி செய்யச் சொல்கிறார்.
கிரேனில் ஆப்பிள் மாலை போடுவது, நூறு கார் போவது எல்லாம் கட்சி கொள்கைக்கு எதிரானது. வீடு வீடாக, கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என வருத்தம் உள்ளது. அதை தான் அன்புமணியை செய்ய கோரினேன். அதனை செய்யவில்லை. பொது வெளியில் அன்புமணி என்னை பற்றி விமர்ச்சிக்காமல் உள்ளது நாடகம்.
வீட்டிற்குள் பேச வேண்டியதை, பொதுவெளியில் அய்யா பேசுவதாக அன்புமணி கூறுகிறார், கட்டுக்கடங்காத மனக்குமுறலை ஊடகம் முன்பு கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறேன். எதிரிகள் கூட என் மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை, சமூக வலைதளங்களில் என்னை கேவலமாக எழுதி வருகிறார்கள். அமைதியாக இருந்து கொண்டு இதனை அன்புமணி செய்து வருகிறார். பா.ம.க இரண்டாக உள்ளது போன்று அன்புமனி அவரே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். குடும்பம் 40 பேர் கொண்டதாக இருந்தது பத்தாக மாறியுள்ளது. குடும்பத்திற்குள்ளாகவே விளையாடி கொண்டிருக்கிறார்.
பொதுக்குழு அறிவித்தவுடன், போட்டியாக அன்புமணி பொதுக்குழு அறிவிக்கிறார். பணத்திற்கு ஒரு கூட்டம் அன்புமணியிடம் சுற்றி கொண்டு இருக்கிறார்கள். பொறுப்புகளை உருவாக்கி வளர்த்த பிள்ளைகளை என்னை திட்டுவதற்காக அன்புமணி மாற்றி உள்ளார். சமூக வலைதளங்களில் என்னை திட்டுவதற்கு அன்புமணி மாற்றி இருந்தாலும், அவர்கள் மேல் எனக்கு கோவம் இல்லை. பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணை மந்திரம் மாயம் போட்டு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி மாற்றியுள்ளார். நல்ல பேச்சாளர் நல்ல சிந்தனையாளர் வடிவேல் ராவணனுக்கு காரை கொடுத்து வளைத்துப் போட்டிருக்கிறார்.
அன்புமணியிடம் ஊடகம் முன்பாக அய்யாவிடம் காலில் விழுந்து கட்சி தொண்டனாக இருப்பேன் என கூறுங்கள் என நண்பர்கள் தெரிவித்தும் இதில் தலையிடாதீர்கள் என அன்புமணி கூறியுள்ளார். அன்புமணியின் மாமனார் கிருஷ்ணசாமி பா.ம.க கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். கட்சிக்காக எதையாவது செய்யக்கூடாதா என தன் மூத்த மகளிடம் தெரிவித்தார். எல்லாம் சரியாகிவிடும் என்று அன்புமணி மாமனார் தெரிவித்தார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை முன்னாள் எம்.பி விஷ்னு பிரசாந்தையும் சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர். அறிவுரை அன்புமனிக்கு கூறினால் அதை அவர் ஏற்க மாட்டார். முயலுக்கு நாலு என்று கூறினால் அவர் மூன்று கால் என தெரிவிப்பார்.
மாம்பழ சின்னம் சின்ன ஒதுக்கியதாக கூறுவது பொய்யானது. தேர்தல் நேரத்தில் மட்டுமே சின்னம் ஒதுக்கிடு செய்வார்கள் பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். கட்சியின் அங்கீகாரமும், சின்னமும் போய் விட்டது, தன்னை சட்டமன்ற உறுப்பினர்களாக அன்புமனி ஆக்கிவிடுவார் என சிலர் அன்புமணியிடம் சுற்றி கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாமலையே அன்புமணி வீட்டில் கட்சி அலுவலகத்தினை அவரது வீட்டிற்கு மாற்றி உள்ளார். கட்சியாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் தைலாபுரம் தோட்டம் தான்.
சட்டப்படியும் தேர்தல் ஆணையத்திடமும் தைலாபுரம் தான் பாமக அலுவலகம் என கொடுத்துள்ளோம். சட்டப்படி வெற்றி கிடைக்கும். பொய் பொய்யாக சொன்னதை கேட்டு அன்புமணியிடம் சென்ற மாவட்ட செயலாளர் என்னிடம் வர வேண்டும். தந்தையிடம் ஒட்டு கேட்பு கருவி வைத்தது எந்த விதத்தில் நியாயம். உலகத்தில் எங்கையாவது நடந்து இருக்கிறதா? அன்புமணி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. கட்சியில் குழப்பத்திற்கு இடமில்லை. அன்புமணி நடத்துவது கட்சியே கிடையாது. பணத்தை வைத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள்
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்
செய்தி: பாபு ராஜேந்திரன் - திண்டிவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.