/indian-express-tamil/media/media_files/2025/05/29/emZdZkZFc2mf13xhQom6.jpg)
"சொல்லப்போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை என்னுடைய சத்தியத்தையும் மீறி 35 வயதிலேயே மத்திய கேபினட் அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு." என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "எங்கள் கட்சியை பற்றிய செய்திகளை பலமுறை கேள்வி கேட்டுள்ளீர்கள் நானும் பதில் அளித்திள்ளேன். தர்மபுரியில் ஒரு கூடத்தில் அன்புமணி பேசியதை நீங்க பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்? என்றும் அன்புமணி பேசினார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும்.
தான் செய்த தவறுகளை மறைத்து மகளிடமும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் பெற முயற்சி செய்துள்ளார். அதற்குண்டான விளக்கம் அளிப்பது என் கடமையாகும். இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்தது அன்புமணி அல்ல. நான் தான். அன்புமணியை 35 வயதில் என் சத்தியத்தியத்தையும் மீறி மத்திய அமைச்சராக நான் தான் தவறு செய்துவிட்டேன். என்னை குற்றவாளியாக மக்களிடம்மும், கட்சிக்காரர்களிடம் அனுதாபம் தேடி முயற்சி செய்துள்ளார். வளர்த்த கிடா நெஞ்சில் பாய்ந்துவிட்டது. அன்புமணி மீது ஒளிவு மறைவின்றி குற்றச்சாட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன்.
எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்தேன். அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, என் தலையில் வீசியது போல் இருந்தது. அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருந்தது. அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு போக சொன்னேன், அன்புமணியும், அவரது மனைவியும் பா.ஜ.க கூட்டணிக்கு சென்றனர். 2 கால்களை பிடித்து கொண்டு, அன்புமணி, செளமியா பா.ஜ.க உடன் கூட்டணி என வலியுறுத்தினர். பா.ஜ.க உடன் கூட்டணி என்று சௌமியா ஏற்பாடு செய்து விட்டார், வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.