3 எழுத்து கட்சிகள் தமிழகத்தில் வளர விட கூடாது.. ராமதாஸ் சொன்ன நறுக் அட்வைஸ்!

இது காலத்தின் கட்டாயம். அதுமட்டும் அல்ல கட்டளையும் தான்.

இது காலத்தின் கட்டாயம். அதுமட்டும் அல்ல கட்டளையும் தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராமதாஸ்,

ராமதாஸ், தலைவர்

பாமக தலைவர் ராமதாஸ்,  3 எழுத்து கட்சிகளை   வைத்து தொண்டர்களுக்கு கொடுத்த அட்வைஸ்  அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

3 எழுத்து கட்சிகள்:

Advertisment

சென்னை அண்ணா சதுக்கம் அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று (30.8.18) நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ராமதாஸ் ஆற்றிய சிறப்பு உரை அரசியல் வட்டாரத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக 3 எழுத்து கட்சிகளை குறித்து ராமதாஸ் கூறிய கருத்து பாமக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இன்றை இளைஞர்களின் உயிர்நாடியாக விளங்கும் சமூகவலைத்தளங்கள் குறித்து ராமதாஸ் பேசினார். நிகழ்ச்சி அவரெ பேசியதாவது, “ தமிழகத்தில் உள்ள 40 சதவீத இளைஞர்கள் பா.ம.க.வில் இருக்கிறார்கள். அவர்கள் டாக்டர் அன்புமணி ராமதாசை கோட்டைக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கிறார்கள். இது காலத்தின் கட்டாயம். அதுமட்டும் அல்ல கட்டளையும் தான்.

Advertisment
Advertisements

இளைஞர்கள் கட்டுப்பாடோடு, கட்சியின் நலன் கருதி மூத்தவர்களையும், நிர்வாகிகளையும் மதித்து செயல்படவேண்டும். மதிக்காமல் செயல்பட்டால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

3 எழுத்தில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க.வும் 3 எழுத்து தான். ஆனால் சில 3 எழுத்து கட்சிகள் தமிழகத்தில் வளராமல், வேரூன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்களுடைய கடமை. ஏனென்றால் அந்த 3 எழுத்துகள் ஆபத்தானவை.

சமூக ஊடகங்களை தவறான வழியில் உபயோகிப்பது கட்சிக்கு பெருமை சேர்க்காது. எனவே சமூக ஊடகங்களை கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். சரியான திசையில் அதனை பயன்படுத்தினால் நாம் ஆட்சியில் அமரலாம்.

இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கே பா.ம.க. வழிகாட்டியாக திகழ்கிறது. எனவே வெறுப்பு அரசியலை உமிழ்பவர்கள், அவதூறு அரசியலை வளர்ப்பவர்களிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ரத்தம் தானம் செய்யுங்கள். ரத்த தான முகாம்கள் வேண்டாம்” என்று கூறினார்.

அவர் கூறிய 3 எழுத்து கட்சிகள் எவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

Dr Ramadoss Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: