/tamil-ie/media/media_files/uploads/2020/09/rama-gopalan-death-news-tamil.jpg)
Hindu Munnani Ramagopalan Death Tamil News: இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு இந்து அமைப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன். 1980-களில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றி வந்து இந்து இயக்கங்களை வலுப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. பாரதிய ஜனதா தலைவர்கள் அவரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
சென்னையில் வசித்து வந்த ராம கோபாலனுக்கு சில தினங்களுக்கு முன்பு சளித் தொல்லை அதிகமாக இருந்தது. உடனடியாக அவரை மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். முதலில் கொரோனா நெகடிவ் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிவித்தனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராம கோபாலன் இன்று ( 30-ம் தேதி) பிற்பகலில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் சிறிது நேரம் வைக்கப்படும் என தெரிகிறது. அவரது மறைவுக்கு இந்து அமைப்பினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.