ராமஜெயம் கொலை, ரயில் கொள்ளை வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ. 2 லட்சம் : சிபிசிஐடி அறிவிப்பு

ராமஜெயம் கொலை வழக்கு, ரயிலில் ஆர்பிஐ பணத்தை கொள்ளையடித்த வழக்கில் துப்புக் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.

By: Updated: September 2, 2017, 02:42:17 PM

ஐந்தாண்டுகளாக துப்பு துலங்காமல் இருக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு, கடந்த ஆண்டு சென்னை ரயிலில் ஆர்பிஐ பணத்தை கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர். இவர் கடந்த 29.03.12 அன்று நடைபயணம் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது அரசியல் வழக்காகப் பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையில் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை. பல முறை நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாரை கண்டித்தும் இதுவரையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதே போல சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஆர்.பி.ஐ வங்கிக்கு பணம் எடுத்து வரப்பட்டது. மர்ம மனிதர்கள் ரயில் மேல் துளையிடப்பட்டு 5.78 கோடி கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கிலும் இதுவரை துப்பு துலங்கவில்லை.

இந்த இரண்டு வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Rail Theft - CBCID

இந்நிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகரத்தை சேர்ந்த ராமஜெயம் 29-3-2012-ம் தேதி அதிகாலை நடை பயிற்சிக்காக செல்லும் போது கொலை செய்யப்பட்டார்.

இதே போல கடந்த ஆண்டு 8-8-2016 சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம்-சென்னை விரைவு ரெயில் பார்சல் வேனில் எடுத்து வரப்பட்ட பணத்தில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு குறித்து தொலைபேசி, செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பொதுமக்கள் தகவல் தரலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இதுகுறித்த தகவல் தர 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 044-28511600, செல்போன்-வாட்ஸ்அப் எண்கள்: 99400 22422, 99400 33233 ஆகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ramajayam murder rail theft case give the clues got rs 2 lakh cbcid announced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X