அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மார்ச் 29, 2012ம் தேதி திருச்சியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து சிபிஐ 2018ம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் தமிழக காவல்துறை விசாரணைக்கு திரும்பியுள்ளது.
திமுகவின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், மார்ச் 29, 2012 அன்று அதிகாலை 5 மணிக்கு நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே போனவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவருடைய இரண்டு செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் தெரியாத சிலர் பின்னர் அவற்றை எடுத்துள்ளனர். ராமஜெயம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு அவருடைய கை, கால்கள் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றப்பட்டு இருப்பும் கம்பிகளினால் கட்டப்பட்ட நிலையில் அவருடைய சடலம் திருச்சி - கல்லணை சாலையில் திருவளர்சோலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது
ஆரம்பத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ராமஜெயத்தின் சடலம் இருப்பதைப் பற்றி கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, திருச்சியில் திமுகவின் மூத்த தலைவரின் தம்பி ராமஜெயம் கொலையான நிகழ்வு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமஜெயம் அரசியலைவிட குடும்பத் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அப்பகுதியில் பெரும் அதிகாரத்தை கையில் வைத்திருந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய திமுக மூத்த தலைவர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை அப்போது திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த சைலேஷ்குமார் யாதவ் திருச்சி மாநகர காவல்துறை விசாரணை செய்தது. விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ராமஜெயத்தின் கொலை வழக்கை தமிழக காவல்துறை, முதல்வரி தனிப்படை பல காவல் பிரிவுகள் விசாரித்தனர். அதே நேரத்தில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை 8 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கியது. பின்னர், ராமஜெயம் கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையிலும் பெரிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா ராமஜெயம், தனது கணவரின் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். சிபிசிஐடி போலீசார் பலமுறை அவகாசம் கேட்டு அளிக்கப்பட்ட பின்னர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்குப் பிறகு, நவம்பர், 2017-ல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து சிபிஐ 2018ம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது. சிபிஐ விசாரணையிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.
ராமஜெயம் கொலவழக்கில் 2018-ல் தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணை தோல்வியடைந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த முடிவு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
சிபிஐ விசாரணையில், பிரிவு 365 (ரகசியமாக மற்றும் தவறாக ஒரு நபரை அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்துதல்) மற்றும் பிரிவு 302 (கொலை) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை செய்தது.
இந்நிலையில், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அண்மையில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ராமஜெயம் கொலை வழக்கு தற்போது மீண்டும் தமிழக காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவின் கைகளுக்கு திரும்பியுள்ளது.
தூத்துக்குடி எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் ஐ.பி.எஸ்., எஸ்.ஐ.டி., தலைவராக இருப்பார் என, அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10-12 பேர் கொண்ட எஸ்ஐடி குழுவில் ஒரு எஸ்பி மற்றும் இரண்டு டிஎஸ்பிகள் உள்ளனர்.
தற்போது தூத்துக்குடி மாட்ட எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் ஐ.பி.எஸ், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசரணைக் குழுவின் தலைவராக இருப்பார் என்று காவல்துறை உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10-12 பேர் கொண்ட இந்த சிறப்பு விசாரணைக் குழுவில், ஒரு எஸ்.பி, 2 டி.எஸ்.பி.க்கள் இருப்பார்கள்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த லாரி கேங் என்றும் அழைக்கப்படும் பவாரியா கும்பலை அடக்கியதில் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அறியப்படுகிறார்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த வழக்கு மீண்டும் தமிழக காவல்துறைக்கு வந்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவுக்கு பவாரிய கொள்ளை கும்பலை ஒடுக்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ் தலைவராக இருப்பார் என்று வட்டாரங்கள் கூறுவதால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.