முதல்முறையாக ஊருக்குள் வந்த பேருந்து: குலவை போட்டு வரவேற்ற பெண்கள்; ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வண்ணாங்குளம் கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், பெண்கள் குலவை போட்டு வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வண்ணாங்குளம் கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், பெண்கள் குலவை போட்டு வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramanathapuram Dist Kamuthi Vannankulam village people welcome govt bus service started from today  Tamil News

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வண்ணாங்குளம் கிராமத்திற்கு முதல்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், பெண்கள் குலவை போட்டு வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே வண்ணாங்குளம் என்ற கிராமம் உள்ளது. கமுதிக்கு அருகில் உள்ளதால், அது கமுதி வட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதி இதுவரை இல்லை.

Advertisment

தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம், ஊரின் வழியாக கமுதி சென்று வர பேருந்து ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜகண்ணப்பன், கமுதிக்கு பேருந்து வசதிக்கான ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, இன்று (மே 19 ஆம் தேதி) திங்கட்கிழமை காலை அந்த ஊருக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பேருந்து வரும்போது விசிலடித்து, கைத்தட்டி, குலவை போட்டு பேருந்தை மக்கள் வரவேற்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Ramanathapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: