மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. நேற்று வெளியிட்டப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி மீண்டும் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி நிலவரத்தில் தி.மு.க கூட்டணி மற்றும் முன்னாள் முதலமைச்சர் . ஓ.பன்னீர் செல்வம் இடையே கடும் இழுபறி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிட்டிங் எம்.பி நவாஸ் கனி போட்டியிட்டுள்ளார். அ.தி.மு.கவில் சார்பில் ஜெய பெருமாள், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா மற்றும் பா.ஜ.க கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். தி.மு.க கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் ஏணி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில், தி.மு.க கூட்டணி ஐ.யூ.எம்.எல் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே குறைந்த வாக்கு வித்தியாசம் இருக்கும், கடும் இழுபறி இருக்கும் என
தந்தி டி.வி கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் அவரது சமூக வாக்குகளை பெற்றதாகவும், அவர் இந்த தேர்தலில் நல்ல Performance செய்ததாக கூறியுள்ளனர். திருச்சூளி சட்டமன்றத்தில் 75% வாக்குப்பதிவு நடைபெற்றது மற்றும் மற்ற இடங்களில் 70% கீழ் வாக்குப் பதிவு நடந்துள்ளது. திருச்சூளி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சட்டமன்றத் தொகுதி ஆகும். அறந்தாங்கி, பரமக்குடி. திருச்சூளி இந்த 3 சட்டமன்றத் தொகுதி வாக்குகள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் என்று கருத்து கூறப்பட்டுள்ளது.
தந்தி டி.வி கருத்துக் கணிப்பில் ஐ.யூ.எம்.எல் 35% வாக்குகளும், ஓ.பன்னீர் செல்வம் 33% வாக்குகளும், அ.தி.மு.க 22% வாக்குகளும் பெறும் என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“