scorecardresearch

மீனவர்கள் குறைகேட்பு கூட்டம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அழைப்பு

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற 17ம் தேதி நடக்கிறது.

Ramanathapuram: Fisherman Grievance Day Tamil News
Ramanathapuram: Collector Johny Tom Varghese press release on Fisherman Grievance Day

Ramanathapuram News in Tamil: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைகேட்பு கூட்டம் வருகிற 17ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொண்டதினைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 17.03.2023 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற உள்ளது.

அக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள இருப்பதால், இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ramanathapuram fisherman grievance day tamil news