தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சுவாரஸ்யமாக இத்தொகுதியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரது பெயரிலேயே ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கரும்பு விவசாயி, வாளி, திராட்சை கொத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில், பிரசார போஸ்டர்கள் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
கரும்பு விவசாயி, வாளி, திராட்சை கொத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில், போஸ்டர்கள் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
இதுதவிர, வாளி, திராட்சை கொத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில், பிரசார போஸ்டர்கள் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து, பாஜக வழக்கறிஞர் அளித்த புகாரை அடுத்து, ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்க கோரி பல்வேறு சின்னங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“