மூடாமல் இருந்த ரயில்வே கேட்... விபத்தை தவிர்த்த லோகோ பைலட்: ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரத்தில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற சேது எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு லோகோ பைலட் அறிவுறுத்தியதின் அடுத்து கேட் கீப்பர் கேட்டை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

author-image
WebDesk
New Update
Ramanathapuram Railway gate not closed Loco pilot avoids accident Tamil News

ராமநாதபுரத்தில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற சேது எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு லோகோ பைலட் அறிவுறுத்தியதின் அடுத்து கேட் கீப்பர் கேட்டை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரத்தில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற சேது எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு லோகோ பைலட் அறிவுறுத்தியதின் அடுத்து கேட் கீப்பர் கேட்டை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை நோக்கி காலை 6.30 மணிக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் அடுத்த வாலாந்தரவை ரயில்வே கேட்டை கடக்கும்முன், கேட் மூடப்படாததை லோகோ பைலட் கவனித்தார். உடனடியாக ரயிலை நடுவழியில் நிறுத்தி, கேட் கீப்பரிடம் கேட்டையை மூடுமாறு அறிவுறுத்தினார். பின்னர் கேட் மூடப்பட்டதும் ரயிலை மீண்டும் இயக்கி சென்றார்.

கேட்டை மூடாமல் இருந்ததற்கு, “எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என கேட் கீப்பர்  விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அலட்சியத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். லோகோ பைலட் நேர்மையான நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ramanathapuram Rameshwaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: