வடமாநிலத்தவர் குழந்தை கடத்தல்: ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டங்களின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டங்களின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 Ramanathapuram SP G Chandeesh on North Indians abducting child spreading false information on social media Tamil News

'சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்' என்று ராமநாதபுரம் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ச. மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்

Ramanathapuram:ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜி. சந்தீஷ் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் தொடர்பு சட்டங்களின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜி. சந்தீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது பின்வருமாறு:-

சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும், சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை கேட்டும், பார்த்தும் பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உதவி எண்: 8300031100 (Hello Police) அல்லது 100 ஆகிய எண்களில் அழைக்கலாம். மேலும் உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம்.

Advertisment
Advertisements

தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம். மேலும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Ramanathapuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: