New Update
00:00
/ 00:00
ரயில்களில் கூட்ட நெரிசல்களை குறைப்பதற்காக தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பது பின்னவருமாறு:- ரயில் எண்.06051 தாம்பரம் - ராமநாதபுரம் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 05, 07, 12, 14, 19, 21, 26, 28 (வெள்ளி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.00 மணிக்குப் புறப்படும். மறுநாள் (12 சேவைகள்) காலை 7.50 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
ரயில் எண். 06052 ராமநாதபுரம் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 01, 06, 08, 13, 15, 20, 22 27, 29 (சனிக்கிழமை) மற்றும் திங்கள்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்குப் புறப்படும். மறுநாள் (12 சேவைகள்) அதிகாலை 03.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
கோச்கள்: 1- ஏசி டூ டையர் கோச், 3- ஏசி த்ரீ டையர் கோச்சுகள், 6- ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகள், 7- ஜெனரல் செகண்ட் கிளாஸ் கோச்சுகள் & 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்
முன்கூட்டியே முன்பதிவுகள் விரைவில் திறக்கப்படும் மற்றும் பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.