/tamil-ie/media/media_files/uploads/2018/03/Dmk-salai-mariya.jpg)
ராமராஜ ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதித்தது எப்படி? என சட்டசபையில் திமுக கடும் எதிர்ப்பை தெர்வித்துள்ளனர்.
ராமராஜ ரத யாத்திரையை இன்று காலை, கேரளாவில் இருந்து செங்கோட்டை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தது. இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தில் பேசிய சட்டமன்ற கட்சி எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுதுள்ளது. ராமராஜ ரத யாத்திரையை அனுமதித்ததன் மூலம், தமிழகத்தில் பாஜக ஆட்சித்தான் நடக்கிறது என்பது புரிகிறது. யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. தடை செய்ய வேண்டும். ரத யாத்திரையால் மத கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது’’ என்று பேசினார்.
இதற்கு ஆளும் கட்சி தரப்பில் இருந்து கடும் எதிப்பு கிளம்பியது.
இதையடுத்து, ‘‘ரத யாத்திரையால் யாருக்கும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து மாநிலங்களைக் கடந்து ரத யாத்திரை வந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மதங்களுக்கும் இடமுண்டு. இதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்’’ என முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, பதில் சொன்னார்.
முதல்வர் பேச்சில் திருப்தி அடையாத திமுக, காங்கிரஸ் கட்சியினர் பேரவையில் அமளியில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து திமுக,காங்கிரஸ் உறுப்பினர்கள், சபை காவலர்களைக் கொண்டு வெளியேற்றப்பட்டனர்.
இதன் LIVE UPDATE க்கு காணலாம்.
பகல் 12.30 மணி : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைதானதைத் தொடர்ந்து, மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகல் 12.20 மணி : சட்டப்பேரவைக்கு எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/Dmk-salaimariyal-cong-300x199.jpg) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பகல் 12.10 மணி : ராஜாஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தம். பாரிமுனையில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு.
பகல் 12.05 மணி : கைது செயுயப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் வேனில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/dmk-salaimariyal-tamimun-ansari-300x217.jpg) சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி
 சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரிபகல் 12.00 மணி : சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பகல் 11.45 மணி : பேரவை அமைந்துள்ள காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை திருப்பிவிடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பகல் 11.40 மணி : திமுக எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், மத வெறிக்கு துணை போகாதே என்று கோஷம் எழுப்பினர். பெரியார், அண்ணா பிறந்த பூமியில் மத வெறியைத் தூண்டாதே என திமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷம் போட்டனர்.
மத வெறிக்கு துணை போகும் மத்திய மாநில அரசுகளே ராஜினாமா செய் எனவும் கோஷமிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us