/indian-express-tamil/media/media_files/2025/09/02/screenshot-2025-09-02-133228-2025-09-02-13-32-45.jpg)
பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மயிலாடுதுறை ரயில் குத்தாலம் வரை இயக்கப்படும். இது குறித்த விபரம் வருமாறு; இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பொறியியல் பணிகள் காரணமாக, காலை 7.45 மணிக்குப் புறப்படும் மயிலாடுதுறை - திருச்சி மெமு ரயிலானது வரும் 2, 3 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து: திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16849) வகும் 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் மானாமதுரை - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - மானாமதுரை இடையே மட்டும் இயங்கும். மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது (16850) வரும் 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மானாமதுரை - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 4, 7, 8 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - குத்தாலம் இடையே மட்டும் இயங்கும். மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 4, 7, 8 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது குத்தாலம் - செங்கோட்டை இடையே மட்டும் இயங்கும். மேலும், ரயிலானது மேற்கண்ட நாள்களில் குத்தாலத்திலிருந்து புறப்படும்.
வழித்தட மாற்றம்: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 4, 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 4, 7 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 6-ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்: பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 9 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 25 நிமிஷங்கள் நின்று காலதாமதமாகச் செல்லும். சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 8- ஆம் தேதி தேவைப்படும் இடங்களிலும் 65 நிமிஷங்கள் நின்று செல்லும். மேற்கண்டவாறு திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.