/indian-express-tamil/media/media_files/2025/05/29/KTdGzUdxlgRjML7SUSEh.jpg)
Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீனவர்கள் கைது: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
Jul 22, 2025 22:15 IST
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: அன்புமணி ராமதாஸ் முதற்கட்டப் பயண விவரம் வெளியீடு
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் முதற்கட்ட விவரத்தை வெளியிட்டுள்ளார். முதற்கட்ட பயண விவரம் பின்வருமாறு: ஜூலை 25: திருப்போரூர், ஜூலை 26: செங்கல்பட்டு, ஜூலை 27: உத்தரமேரூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 28: அம்பத்தூர், மதுரவாயல், ஜூலை 31: கும்மிடிப்பூண்டி, ஆகஸ்ட் 1: திருவள்ளூர், திருத்தணி ஆகிய இடங்களில் அன்புமணி ராமதாஸ் பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திப்பார்.
-
Jul 22, 2025 22:12 IST
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2வது இடம்; தங்கம் தென்னரசு பெருமிதம்
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானக் குறியீட்டில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதற்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். இது "எல்லாருக்கும் எல்லாம்" என்ற கொள்கையுடன் செயல்படும் திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த மணிமகுடம் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், "தனிநபர் வருமானக் குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2ஆம் இடத்தைப் பிடித்திருப்பது 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற கொள்கையுடன் செயல்படும் திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் இது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அதிமுக ஆட்சியின் இறுதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.1.43 லட்சம் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 22, 2025 21:33 IST
கடலூரில் சட்டவிரோத கருக்கலைப்பு; போலி மருத்துவ தம்பதி உட்பட 6 பேர் கைது
கடலூரில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக போலி மருத்துவ தம்பதி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுப்பாளையத்தில் பார்மசி கல்லூரி நடத்தி கடலூரில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக சிவகுருநாதன், உமா மகேஸ்வரி தம்பதி, அரசு மருந்தாளுநர், அரசு செவிலியர், மருந்து விற்பனை பிரதிநிதி, 2 மருந்த உரிமையாளர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jul 22, 2025 21:29 IST
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 22, 2025 21:24 IST
குளித்தலை அருகே ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் சேவை 30 நாட்களுக்கு ரத்து - கோயில் நிர்வாகம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப் கார் நிலைய பராமரிப்பு பணி காரணமாக 30 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Jul 22, 2025 20:19 IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்; அப்ரூவராக மாறிய காவலர் ஸ்ரீதர் மனு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன். அனைத்து காவலர்களும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தைமகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி கைதான காவலர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
Jul 22, 2025 19:26 IST
அந்தரங்க வீடியோக்களை அகற்ற வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்படுகிறது - ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில், இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக வழிக்காட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசு வகுத்து வரும் வழிக்காட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 22, 2025 19:23 IST
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா(AI 315 விமானம் தரையிறங்கி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டதும் அதன் துணை மின் அலகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தானியங்கி அமைப்புகள் மூலமாக தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
Jul 22, 2025 19:21 IST
செந்தில்பாலாஜி சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது - ஐகோர்ட்டில் இ.டி வாதம்
மருத்துவ சிகிச்சைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்றும் அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் வாதிட்டுள்ளது.
-
Jul 22, 2025 18:51 IST
மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை: எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தில் மணமகளுக்கு இலவசமாக பட்டுப்புடவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி மேலும் ஏழை நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் அன்று நெய்யப்படும் துணிகளுக்கு அன்றே கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
Jul 22, 2025 18:10 IST
லாரியை முந்தி செல்ல முயன்ற இளைஞர் உடல் நசுங்கி பலி
சென்னை கொடுங்கையூர் எழில்நகர் அருகே முன்னால் சென்ற குப்பை லாரியை முந்த முயன்ற இளைஞர் கணேஷ்(25), லாரியில் அடிபட்டு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போக்குவரத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 22, 2025 18:01 IST
பணம்கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்பு
கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலம் போலீசார், பணம் கேட்டு கடத்தப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களையும் மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிய நிலையில் அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளார்.
-
Jul 22, 2025 17:50 IST
மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அறிக்கை தயார் செய்ய அனுமதி
மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. பூதமங்கலம், வஞ்சி நகரம், கொடுக்கப்பட்டியில் 278 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது. ரூ.68 கோடியில் அமையவுள்ள தொழிற்பூங்கா மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
-
Jul 22, 2025 17:31 IST
தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறி: அண்ணாமலை
'' தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்பட தெரிய துவங்கி உள்ளது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டணியை பற்றி, கட்சியை பற்றி எனது கருத்துகளை பல முறை கூறியுள்ளேன்.துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாட்டுக்கு பல சேவை செய்துள்ளார். அவர் நன்றாக இருக்கே வேண்டும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றார்.
-
Jul 22, 2025 17:30 IST
புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்
தமிழகத்தில் 2 இடங்களில் புதிய மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. இதன்படி கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவது அடிப்படையில் இரண்டு மணல் குவாரியும் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. நெரூர் வடக்கு மணல் குவாரியில் இருந்து 2 ஆண்டுகளில் 3,21,000 மீட்டர் க்யூப், அச்சமாபுரம் மணல் குவாரியில் இருந்து 4,80,000 மீட்டர் க்யூப் மணல் எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
-
Jul 22, 2025 17:22 IST
நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 24, 25ல் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 26ல் நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Jul 22, 2025 17:13 IST
கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு தடை
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3 நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்ய, மார்க்சிஸ்ட் கட்சி இவ்வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரியது. அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், செளந்தர், விஜயகுமார் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Jul 22, 2025 17:11 IST
காரில் கடத்திய 824 ஜெலட்டின் குச்சிகள், 550 டெட்டனேட்டர் பறிமுதல்
ஓசூரில் வாகன சோதனையின்போது, காரில் கடத்தி வந்த 824 ஜெலட்டின் குச்சிகள், 550 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – ராயக்கோட்டை சாலையில் டவுன் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரது காரை சோதனை செய்தனர். அதற்குள் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் இருந்தது.
-
Jul 22, 2025 17:10 IST
இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 2-ம் இடம்!
தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-ம் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. புள்ளியில் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்கள்படி மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
-
Jul 22, 2025 17:09 IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது
நடுக்கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர், அவர்களது விசைப்படகை இலங்கை கடற்படை நேற்றிரவு சிறைப்பிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர், அவர்களது விசைப்படகை இலங்கை கடற்படை நேற்றிரவு சிறைப்பிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Jul 22, 2025 17:07 IST
2026-ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி: ஆர்.எஸ்.பாரதி
2026-ல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். எதிரிகளின் பயமே நமது வெற்றி. மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் ஜூன் 1ல் தொடங்கி வைத்தார். ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சி, அடிமை அதிமுகவின் துரோகத்தை கண்டு மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
-
Jul 22, 2025 17:06 IST
விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து ஆய்வு செய்ய தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து 15 குழுக்கள் மூலம் கடந்த ஒரு வாரம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக 400க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வை தொடர்ந்து 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Jul 22, 2025 16:53 IST
மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை எழும்பூர் அருகே உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதால் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் தாம்பரம் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படாததால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
-
Jul 22, 2025 16:22 IST
கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3 நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. -
Jul 22, 2025 16:19 IST
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வத்தலகுண்டு அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
வீடியோ: சன் நியூஸ்#Watch | வத்தலகுண்டு அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் கோரிக்கை மனுக்களை அளித்தனர்!
— Sun News (@sunnewstamil) July 22, 2025
300க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்று உடனடியாக கணினியில் பதிவேற்றம்.#SunNews | #UngaludanStalin | #Dindigul pic.twitter.com/sqhiiw4cUw -
Jul 22, 2025 15:21 IST
விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய வரும் 9ம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும்.
-
Jul 22, 2025 15:19 IST
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 25%-க்கு அதிகமானவர்களுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற உள்ளது.
-
Jul 22, 2025 14:50 IST
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தது
இந்திய ராணுவத்திற்கான முதல் தொகுதி அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தடைந்தன. அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன. இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
-
Jul 22, 2025 14:10 IST
டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
குளறுபடி உச்சமாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும். சேலத்தில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டி சரியாக சீல் வைக்கப்படவில்லை. குருப் 4 குளறுபடிகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
Jul 22, 2025 14:04 IST
100 நாள் வேலைத்திட்டம் : ரூ464 கோடி நிலுவைத்தொகை
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ464 கோடி நிலுவைத்தொகை உள்ளது என்று வேளான் அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது,
-
Jul 22, 2025 14:02 IST
கிட்னி விற்பனை - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நாமக்கல் பகுதியில் கிட்னி விற்பனை சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுகுழு, திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார இயக்குனர் தலைமையிலான குழுவினர் கிட்னி விற்பனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 22, 2025 14:01 IST
அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
Jul 22, 2025 14:00 IST
பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தி: அமைச்சர் சிவசங்கர்
பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் இல்லை. பேருந்து கட்டண உயர்வு நிச்சயம் இருக்காது. அது ஒரு வதந்தி என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியில் கூறியுள்ளார்,
-
Jul 22, 2025 13:58 IST
சிறுவனால் உயிரை விட்ட சிறுமி
சேலத்தில், தன்னை காதலிக்கவில்லை என்றால் இறந்துவிடுவதாக மிரட்டி 17 வயது சிறுவன் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து பயந்து போன சிறுமி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 22, 2025 12:58 IST
வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை..!!
திருவள்ளூர்: செங்குன்றத்தில் வடமாநில தொழிலாளி தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமாநில தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 22, 2025 12:36 IST
குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!
தென்காசி சுற்றுவட்டாரத்தில் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியருவி, சிற்றருவிகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jul 22, 2025 12:28 IST
ஓரணியில் தமிழ்நாடு: தடையை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு
ஓரணியில் தமிழ்நாடு பெயரில் ஆதார் விவரம் வாங்கவில்லை. தவறான தகவல்களை அளித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுகவினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படியே உறுப்பினர்களை சேர்க்கிறோம். உறுப்பினர் சேர்க்கைக்கு சம்மதம் பெறுவதற்காக மட்டுமே ஓ.டி.பி. பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
-
Jul 22, 2025 12:19 IST
கிட்னி திருட்டு: சிறப்புக் குழுவினர் ஆய்வு
கிட்னி திருட்டு தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆய்வு நடத்தி வருகின்றனர். கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
-
Jul 22, 2025 12:18 IST
நுங்கம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்ட இயந்திரம் பழுதால் கடும் போக்குவரத்து நெரிசல்..!!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தெரேசா சர்ச் அருகே மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்ட இயந்திரம் பழுதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தமர் காந்தி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வழியில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மாற்று வழிகளை பயன்படுத்த போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
Jul 22, 2025 11:48 IST
பேருந்து கட்டணங்கள் உயர்த்தும் திட்டம் இல்லை: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்
பேருந்து கட்டணங்கள் உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்து கூற கடந்த மாதம் அரசு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Jul 22, 2025 11:47 IST
சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு..!!
வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க 4 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர், மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
-
Jul 22, 2025 11:45 IST
ஹிமாச்சல் பிரதேசத்தில் ரயில் சென்ற பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்து விபத்து
ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், காங்ரா பகுதியில் பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்த போதே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கானவர்களை ஏற்றிச் சென்ற ரயில் சக்கி நதிப் பாலத்தைக் கடந்ததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒன்றிய பாஜக ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்துள்ளதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலச்சரிவு சம்பவங்களும் தினமும் வருகின்றன. சமீபத்திய சம்பவம் காங்க்ராவில் உள்ள ஜம்மு ரயில் பாதையில் உள்ளது, அங்கு ரயில்வே பாலத்தின் அடித்தளத்தின் பெரும்பகுதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆயிரக்கணக்கான பயணிகள் நிறைந்த ரயில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விபத்துக்குப் பிறகு, ரயில்வே பழுதுபார்க்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
-
Jul 22, 2025 11:45 IST
தக்காளி விலை 2 நாட்களில் கிலோவுக்கு ரூ.25 உயர்வு
வரத்து குறைவால் கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் கிலோ தக்காளி ரூ.25 உயர்ந்துள்ளது. சில்லறைக் கடைகளில் கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது.
-
Jul 22, 2025 11:20 IST
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு - அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க அரசியல் சாசன அமர்வு உத்தரவு
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பின் மீது விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவரின் கடிதம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்தி வருகிறது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பிஎஸ். நரசிம்மா, அதுல் சந்துர்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணை தொடங்கிய நிலையில், அனைத்து மாநிலங்களும் ஒரு வார காலத்தில் பதிலளிக்க அரசியல் உத்தரவிட்டு வருகிற 29 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
-
Jul 22, 2025 11:13 IST
நாடாளுமன்றம் முடக்கம்
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.
-
Jul 22, 2025 11:05 IST
வினாத்தாள் நடைமுறை மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம்
சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு தொடர்பான சர்ச்சை குறித்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். "சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லை. குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14 ஆம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் மாற்றம். டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது" என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக மதுரையில் குரூப்-4 கேள்வித்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
-
Jul 22, 2025 10:47 IST
அஜித் குமார் கொலை வழக்கு - சி.பி.ஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகும் சாட்சிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு 2வது முறையாக சாட்சிகள் ஆஜராகி வருகிறார்கள். தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன், கோயில் ஊழியர் பிரவீன் குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத் குமார், ஆட்டோ ஓடுநர் அருண் குமார், அஜித்குமாரின் தம்பி நவீன் குமார் ஆகிய 5 பேரும் மதுரையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
-
Jul 22, 2025 09:53 IST
குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு
குரூப்-4 விடைத்தாள்கள் ட்ரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படாது என டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும். ஆவணங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 22, 2025 09:48 IST
ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து - தொழிற்சாலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை அமைத்து போலீசார் தேடல்
ஆண்டியாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் செல்வகுமார், மேலாளர் பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
-
Jul 22, 2025 09:37 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.9285 விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.