Coimbatore, Madurai, Trichy LIVE News: தமிழகத்தில் இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகு, 7 ​மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Jul 13, 2025 20:40 IST

    தமிழகத்தில் இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    அதே போல, சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

     



  • Jul 13, 2025 18:17 IST

    நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்குப் பதில் காட்பாடியில் இருந்து புறப்படுகிறது



  • Advertisment
  • Jul 13, 2025 17:17 IST

    திருச்செந்தூர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்

    திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கிற்கு பிறகு, விடுமுறை நாளை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு, நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து முருகனை தரிசித்து வருகின்றனர் 



  • Jul 13, 2025 16:52 IST

    ரயில் விபத்து - கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பாக காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர், மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாலை 04:00 மணி நிலவரப்படி 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, பயணிகள் வசதிக்காக திருவள்ளூர் பேருந்து நிலையம் - ஆவடி மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் - பூந்தமல்லி இடையே பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தற்போது வரை தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.



  • Advertisment
    Advertisements
  • Jul 13, 2025 16:33 IST

    ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலத்தில், ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, பரிசல் துறைகளில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.



  • Jul 13, 2025 16:30 IST

    காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

    வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். அனைவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு ரகசிய புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர் அதில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து காப்பக உரிமையாளர் அருள்தாஸ், பிரியா, காப்பக ஓட்டுநர் பழனி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 



  • Jul 13, 2025 16:05 IST

    திருவள்ளூர் அருகே மீண்டும் தீப்பிடித்த டீசல் டேங்கர்

    திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஒரு டேங்கரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்த டேங்கரை தள்ளியபோது டீசல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து வருகிறது. 18 டீசல் டேங்கர்கள் முழுமையாக எரிந்த நிலையில் மேலும் ஒரு டேங்கரில் தீப்பிடித்தது. டீசல் டேங்கரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • Jul 13, 2025 16:03 IST

    தாம்பரம் அருகே 3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதல்

    சென்னை வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வருகின்ற சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில் பெருங்களத்தூர் ஏரிகரை சிக்னல் அருகே கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பஸ் ஒன்று கார் மீது மோதியது. இதனால் அந்த கார் அதற்கு முன் இருந்த மற்றொரு காரினை மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



  • Jul 13, 2025 15:31 IST

    ரயில் புறப்படும் இடம் மாற்றம் - பயணிகள் வாக்குவாதம்

    திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ரெயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 1 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் நோக்கி செல்ல வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில், அரக்கோணத்தில் புறப்படும் என திடீர் அறிவிப்பால் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து அரைமணி நேரத்தில் எப்படி அரக்கோணம் செல்ல முடியும்? என பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Jul 13, 2025 15:30 IST

    உயிரை மாய்த்துக் கொண்ட மாடல் அழகி

    கருப்பழகி பிரிவில் உலகழகி பட்டம் பெற்ற புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல், பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



  • Jul 13, 2025 15:04 IST

    விடுமுறை: திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

    வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.



  • Jul 13, 2025 14:56 IST

    மகளிர் விடியல் பேருந்துகளை தொடங்கி வைத்த உதயநிதி

    திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்மாத்தூர் முதல் தீபம் நகர் வரை 2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை கொடியசைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையிலான 4 குளிர்சாதன பேருந்துகளையும் தொடங்கி வைத்தார்.



  • Jul 13, 2025 14:49 IST

    ரஞ்சித் படப்பிடிப்பில் கார் ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழப்பு

    நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடைபெற்ற இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில், சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். படப்பிடிப்பு பயிற்சியின்போது மோகன்ராஜ் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 13, 2025 14:42 IST

    அதிமுக-பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும்: உதயநிதி

    திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல பூத் முகவர்கள் பயிற்சி முகாமில் பேசிய உதயநிதி, “பாஜக அரசு பாசிச மாடல் அரசு, அதிமுக அரசு அடிமை மாடல் அரசு, எடப்பாடி பழனிசாமி இப்போது காவி சாமி ஆகிவிட்டார். வரும் தேர்தலில் தி.மு.க.தான் வெற்றி பெறப் போகிறது. பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும். அடுத்த 8 மாதங்கள் பூத் முகவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன. பல கட்சிகள் பூத் முகவர்களையே போடாத நிலையில் டிஜிட்டல் முகவர்களை திமுக அமைத்துள்ளது. 730 கோடி மகளிர் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் 1000 ரூபாய் - 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்” என்று கூறினார்.



  • Jul 13, 2025 14:15 IST

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவையில் நாளை மறுநாள் ( 15-ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



  • Jul 13, 2025 13:33 IST

    ராணிப்பேட்டையில், குளிக்கச் சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

    ராணிப்பேட்டை, மேட்டு குன்னத்தூரில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Jul 13, 2025 12:02 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,500 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,250 கன அடியில் இருந்து 30,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி; நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.



  • Jul 13, 2025 09:53 IST

    கடனால் நேர்ந்த அவமானம்

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கணவனுக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தையால் பேசியதால் இளம்பெண் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணில் கணவல் மற்றும் கடன் கொடுத்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Jul 13, 2025 09:51 IST

    அமைச்சர் வேலுவின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற வைகோ, துரை வைகோ

    திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் சகோதரர் இல்லத் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ பங்கேற்றனர். 



  • Jul 13, 2025 09:20 IST

    அமைச்சர் நாசர் ஆய்வு

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



  • Jul 13, 2025 09:19 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு

     நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகு, 7 ​மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Tamilnadu News Latest news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: