திருப்பரங்குன்றம் செல்ல முயன்றவர்களை கைது செய்ததை கண்டித்து இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ.க, இந்து அமைப்புகள் என 38 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து பா.ஜ.க.,வினர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் சுமார் ஐம்பது பேர் இராமேஸ்வரம் மேல் வாசல் முருகன் கோவில் முன்பாக கந்தசஷ்டி கவசம் திருப்புகழ் பாராயணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல் இராமநாதபுரம் வழி விடு முருகன் கோவில் முன் பாராயணம் பாடி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.