கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி
Chicken with crow meat sale in Rameswaram : புனித தலமான ராமேஸ்வரத்தில் கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை செய்ததாக 2 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
Chicken with crow meat sale in Rameswaram : புனித தலமான ராமேஸ்வரத்தில் கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை செய்ததாக 2 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், இந்துக்களின் புனித தலமாக விளங்குகிறது. புண்ணிய தீர்த்த கடலில் நீராடுவதற்காக, இந்தியா மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். பித்ரு கடன் உள்ளிட்ட சடங்குகள் அங்கு நடைபெறுவதால், மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் காகங்கள் இருப்பதும் இயற்கை தான். ஆனால், சிலநாட்களாக, அங்கு பறந்து திரியும் காகங்களின் அளவு குறைந்து வருவது பக்தர்களுக்கு மட்டுமல்லாது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
போலீசார் இதுகுறித்து நடத்திய ஆய்வில் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. காகங்களுக்கு, மதுபானம் கலந்த அரிசியை சிலர் உணவாக படைக்கின்றனர். அதை உண்ணும் காகங்கள், சிறிதுநேரத்தில் மயக்கமடைந்து அங்கேயே விழுந்து விடுகின்றன. அத்தகைய காகங்களை எடுத்துச்சென்று, கோழிக்கறி விற்பனையாளர்களிடம் அவர்கள் விற்று விடுகின்றனர்.
போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்ததன் விளைவாக, கோழிக்கறியுடன் காக்கா கறி கலந்து விற்பனை செய்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கடையில் இருந்து 150 காகங்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.