பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய விரைவு மற்றும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மே 17 முதல் 18 வரை பல முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பயண அழுத்தம் அதிகரித்திருப்பதையடுத்து, கடந்த 6 மாதங்களில் 14 முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
இணைக்கப்படும் கூடுதல் பெட்டிகள்:
ராமேசுவரம் - எழும்பூர் விரைவு ரயில் (எண்: 22662/22661):
மே 17 முதல் ஒரு கூடுதல் பொது இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் மொத்தம் 23 பெட்டிகளாக இயக்கப்படும்.
ராமேசுவரம் - எழும்பூர் விரைவு ரயில் (எண்: 16752/16751):
மே 18 முதல் கூடுதல் பெட்டி இணைப்பு.
நாகர்கோவில் - கோட்டயம் விரைவு ரயில்:
மே 20 முதல் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி.
திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில்:
மே 22 முதல் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டி.
மதுரை - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேலி, மயிலாடுதுறை - தஞ்சாவூர், திருச்சி - மயிலாடுதுறை, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்கள்:
மே 25 முதல் இரண்டு கூடுதல் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
மொத்தமாக, 18 ரயில்களில் இருமார்க்கத்திலும், படுக்கை வசதி, குளிர்சாதன இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகை கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்நடவடிக்கையின் நோக்கம்:
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு சீட்டுகள் உறுதியாக கிடைக்க செய்வதுடன், காத்திருப்பு பட்டியல்களை குறைக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.