வங்கக் கடலில் வலுப்பெறும் தாழ்வுப் பகுதி: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை- ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் மிக கனமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மீன்பிடி விசைப்படகுகளுக்கு கடலுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மீன்பிடி விசைப்படகுகளுக்கு கடலுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Rameswaram Rain Fishermen Heavy Rain

Rameswaram Heavy Rain

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவுவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை- தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, பாக் நீரிணை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இதன் விளைவாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மீன்பிடி விசைப்படகுகளுக்கு கடலுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து, மீனவர்கள் தங்களின் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

Advertisment
Advertisements

ராமேசுவரத்தில் மிக கனமழை பதிவு:

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நேற்று மிக கனமழை பெய்தது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரையிலும் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மழையினால் ராமேசுவரம் பேருந்து நிலையம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 170 மி.மீ, மண்டபத்தில் 143 மி.மீ, பாம்பனில் 113 மி.மீ, ராமேசுவரத்தில் 95 மி.மீ மழையும் பதிவானது.

Rameshwaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: