ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாட்டம் : தலைமை காஜி அறிவிப்பு

இஸ்லாம் மக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான ரம்ஜான் பண்டிகை தமிழகத்தில் நாளைக் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தில் ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு மிகவும் முக்கியமான கடமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து 30 வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.  ஷவ்வால் பிறை தெரிவதைத் தலைமை உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் தலைமை காஜி அறிவிப்பார்.

இந்த வருடத்திற்கான பிறை நேற்று தெரியாத காரணத்தால் நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை நாளைக் கொண்டாடப்படுவதால், இன்று பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close